VJ Anjana : சன் மியூசிக் தொலைக்காட்சியில் நீண்டகாலமாக நம்பர்-1 தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருந்தவர் VJ அஞ்சனா. இவர் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்தவர். இவர் பொது நிகழ்ச்சி, ரியாலிட்டி ஷோ, இசை வெளியீட்டு விழா என அனைத்திலும் தன் திறமையை வெளிகாட்டி வந்தார். இவருக்கென்று ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது.
இவர் கயல் படத்தின் நடிகரான சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் நடுவில் எந்த ஒரு தொலைக்காட்சியிலும் வேலை பார்க்காமல் இருந்தார்.தற்பொழுது நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன் திறமையை மீண்டும் வெளிகாட்டி வருகிறார்.
இவர் தற்பொழுது சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். புடவை, சுடிதார், மாடர்ன் உடை என அனைத்து ஆடைகளிலும் அழகாக போஸ் கொடுத்து சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மழையை ரசித்து இரண்டு வரி எழுதி தனது புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அவர் மழை பற்றி கூறியது இதோ ஓஹோ… மேகம் வந்ததோ! யார் சொன்னது சாம்பல் நிறம் இருள் என்று? சாம்பல் மேகங்கள் மகிழ்ச்சியின் அடையாளம். சிலர் மழையை உணர்வார்கள் சிலர் மழையில் நினைவார்கள் என VJ அஞ்சனா குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.