தமிழ் சினிமா உலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் என்னதான் ஹிட் படங்கள் கொடுத்து வந்தாலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் யாருக்கு அதிகம் என்பதை தெரிந்து கொள்ள அவ்வபோது மோதிக் கொள்கின்றனர் அந்த வகையில் எம்ஜிஆர் – சிவாஜி ரஜினி – கமலை தொடர்ந்து அஜித், விஜய் பல தடவை மோதினாலும்..
இன்று வரை ஓய்ந்த பாடு இல்லை கடந்த பொங்கலை முன்னிட்டு கூட அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் களம் கண்டன அஜித்தின் துணிவு திரைப்படம் சமூக அக்கறை கொண்ட ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்து இழுத்தது.
மறுபக்கம் தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கதை ரொம்ப பழசு என்பதால் ரசிகர்கள் மத்தியில் அந்த அளவிற்கு கவனம் இருக்கவில்லை தற்பொழுது குடும்ப ஆடியன்ஸ்கள் படத்தை பார்த்து கொண்டாடுவதால் நல்ல வசூலை அள்ளி வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இரண்டு திரைப்படங்களும்..
இதுவரை எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது அஜித்தின் துணிவு திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடியும், விஜய்யின் வாரிசு திரைப்படம் 290 கோடியும் வசூலித்திருக்கிறதாம்.. இந்த நிலையில் இரண்டு திரைப்படங்களும் USA (NORTH AMERICA) வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
அங்கு அஜித்தின் துணிவு திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளது.. விஜயின் வாரிசு திரைப்படம் பிளாப் ஆகியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்று பல வெளிநாடுகளில் அஜித்தின் துணிவு கையே ஓங்கி இருக்கிறதாம். இதோ north america வசூல் நிலவரத்தை நீங்களே பாருங்கள்..