Jailer : 2023 ஆம் ஆண்டு சினிமா பிரபலங்களுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. சிறிய பட்ஜெட் படங்கள் தொடங்கி பெரிய பட்ஜெட் படங்கள் வரை பல வெளிவந்து வெற்றி பெற்று வருகின்றன முதலில் அஜித்தின் துணிவு விஜய்யின் வாரிசு படங்கள் பொங்கலுக்கு வெளியாகின.
இதில் இரண்டு திரைப்படங்களுமே நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது அதன் பிறகு வெளியான சின்ன பட்ஜெட் படங்களும் பெரிய வெற்றி பெற்ற நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படமும் வெளியாகி அனைத்து இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்த படம் நான்கு நாட்கள் முடிவில் மட்டுமே சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது வருகின்ற நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது இந்த நிலையில் 2023ல் வெளியான தமிழ் திரைப்படங்கள் தமிழ்நாட்டையும் தாண்டி வெளிநாடு மற்ற மாநிலங்களிலும் நல்ல வசூலை பார்த்து உள்ளது.
அதன் படி 2023 ல் USA நல்ல லாபத்தை பார்த்த தமிழ் திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.. ரஜினியின் – ஜெயிலர், அஜித்தின் – துணிவு, சரத்குமாரின் – போர் தொழில், பொன்னியின் செல்வன் தனுஷின் – வாத்தி, உதயநிதியின் – மாமன்னன், விஜய் சேதுபதியின் – விடுதலைப் போன்ற படங்கள் நல்ல லாபத்தை பார்த்துள்ளது.
இதில் விஜயின் வாரிசு திரைப்படம் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு திரைப்படம் கேரளா மற்ற இடங்களில் நல்ல வசூல் வேட்டை நடத்தினாலும் USA – வில் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியதால் அங்கு பெரிய லாபத்தை ஈட்ட வில்லை என சொல்லப்படுகிறது.