விளம்பரப் படங்களில் நடித்து வந்த சரவணன் அருள் தற்போது அதை தவிர்த்து விட்டு தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் இந்த படத்தின் பட்ஜெட் 200 கோடி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் விளம்பரப் படங்களை எடுத்து வந்த ஜேடி ஜெர்ரி ஆகியோர் இணைந்து தற்போது சரவணன் அண்ணாச்சி நடிக்கும் படத்தை எடுத்து வருகின்றனர்.
விளம்பர படங்களில் பல டாப் நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்த சரவணன் அருண் இப்போது பெயர் வைக்க படாத படத்தில் நடிப்பதால் அந்தப் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர் காரணம் சரவணன் அருள் இந்த படத்தில் சண்டை காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் எப்படி நடித்திருக்கிறார் என்பதை பார்க்க தற்போது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு வித்தியாசமான கதைக்களத்தை எடுத்துள்ளனர் மேலும் எச்டி தரத்தில் படத்தை எடுக்க முனைப்பு காட்டி உள்ளது இதனால் நிச்சயம் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து அளிக்கும் என கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் சரவணன் அவர்களுக்கு ஜோடியாக பல டாப் நடிகைகளை களமிறக்க படக்குழு திட்டம் போட்டது ஆனால் இந்த படத்தில் நடித்ததால் தனக்கு இமேஜ் கெட்டுவிடும் என நினைத்து நடிகைகள் பலரும் இந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் கவர்ச்சி நடிகையான ஊர்வசி ரவுதேலா என்பவரை கமிட் செய்தது.
இந்த படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது ஏனென்றால் அப்படி ஒரு சிறப்பம்சம் அந்த கதாபாத்திரத்தில் தான் இவர் நடிக்கிறார் மேலும் இந்த திரைப்படத்திற்காக அவர் 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன இதனை பார்த்த டாப் நடிகைகள் பலரும் பேசாமல் இந்த படத்தில் நடித்து இருக்கலாமே என தற்போது புலம்பி வருகின்றனராம்.
சரவணன் அருள் இந்த திரைப்படத்தை ஹிட் படமாக கொடுத்துவிட்டால் டாப் நடிகைகள் பலரும் இவருடன் ஜோடி போட்டு நடிக்க ஓடி வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.