உலக நாயகன் கமலஹாசன் பல வருடங்களாக திரையுலகில் நடித்து வருகிறார் இவர் கடைசியாக நடித்த விக்ரம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. விக்ரம் படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் கிடப்பில் கடந்த இந்தியன் 2 படத்தில் நடிக்க தற்பொழுது ரெடியாகி உள்ளார்.
‘இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் தற்பொழுது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கமலுடன் கைகோர்த்து காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, யோகி பாபு.
மற்றும் டெல்லி கணேஷ், மனோ பாலா என மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்தியன் 2 படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு கமல் அடுத்ததாக யாருடன் இணைவார் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் உலக நாயகன் கமலஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 7ஆம் தேதி..
அவர் எந்தெந்த புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகும் என சொல்லப்படுகிறது அந்த வகையில் இவர் ஏற்கனவே நடித்து பாதியில் விடப்பட்ட சபாஷ் நாயுடு படத்தில் மீண்டும் கமல் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மற்றொன்று கமல் நடிப்பில் உருவாக இருக்கும் தேவர்மகன் 2 படம்..
உருவாகவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அப்பொழுது சொல்லப்படும் என கூறப்படுகிறது தேவர் மகன் 2 படத்திற்கு படக்குழு தலைவன் இருக்கிறான் என்ற பெயரை வைத்து படத்தை எடுக்கும் என கூறப்படுகிறது இந்த கதை திரைக்கதை கமல் எழுத மகேஷ் நாராயணன் அந்த படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.