7G Rainbow colony 2: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படம் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்ததால் படத்தின் கதை, பாடல்கள் என் அனைத்து ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது.
எனவே எப்பொழுது இந்த படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் குறித்து தற்பொழுது திட்டமிடப்பட்டுள்ளது என்றும் சூட்டிங் விரைவில் தொடங்க இருப்பதாகவும் அப்டேட் வெளியாகி உள்ளது.
நடிகர் ரவி கிருஷ்ணா சோனியா அகர்வால் ஆகியோர்களின் நடிப்பில் கலந்த 2004ஆம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலனி படத்தின் செல்வராகவன் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். காதல் படமாக உருவாகியிருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
முக்கியமாக கிளைமாக்ஸ் நெஞ்சை உருக்கிய நிலையில் இதனுடைய அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர் அப்படி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து தற்பொழுது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளது இந்த படத்தினை செல்வராகவனே இயக்க ரவி கிருஷ்ணா ஹீரோவாக நடிக்க உள்ளார்.
ஹீரோயினாக அனஸ்வரா ராஜன் கமிட்டாகியுள்ளார் வருகின்ற செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த படத்தின் சூட்டிங் தொடங்க உள்ளதாக படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர். படத்தின் ஹீரோவான ரவி கிருஷ்ணன் நீண்ட நாட்களாக படங்களின் நடிக்காமல் இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க உள்ளார்.
இதனை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இதனை அடுத்து செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க உள்ளார்.