தென் இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றவரும் நிலையில் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் பலமுறை கூறியிருக்கிறார். அந்த வகையில் வாரிசு திரைப்படம் முடிந்த உடனே லோகேஷ் இடம் கேட்கும் போது இன்னும் பத்து நாட்களில் தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட் வெளியாகிவிடும் என்று கூறி இருந்தார்.
ஆனால் இதுவரைக்கும் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் தளபதி 67 திரைப்படம் குறித்து பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு 50 வயது கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது
அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய் மற்றும் த்ரிஷாவிற்கு மகளாக பிக் பாஸ் பிரபலம் ஜனனி நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். ஆனால் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து தான் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருப்பதாக கூறபடுகிறது.
ஜனவரி 26 ஆம் தேதி தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட் வெளியாகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் என்று கூறபடுகிறது. இருந்தாலும் பிப்ரவரி மாதத்திற்காக ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.