10 அடி உயரத்தில் தளபதி விஜயின் உருவசிலையை வைத்து அசத்திய ரசிகர்கள்.! தீயாய் பரவும் புகைப்படம்.

vijay

தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான கதையம்சம் உள்ள திரைப்படங்கள் வெளிவந்து வெற்றியை கண்டாலும் ஆக்சன் திரைப்படங்களுக்கு என்று எப்போதும் தனி மவுசு இருந்து வருகிறது அதிலும் டாப் நடிகர்கள் ஆக்ஷன் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால் ரசிகர்களும் மக்களும் அத்தகைய படங்களை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

அதை சரியாக புரிந்து கொண்ட விஜய் ஒரு கடத்தில் காதல் சம்பந்தப்பட்ட திரைப்படங்களில்  தூக்கி எரிந்து விட்டு திருமலை, பகவதி போன்ற படங்களில் ஆக்சன் காட்சிகளில் சிறப்பாக இருந்ததால் அதன் பிறகு ஆக்ஷன் படங்களில் பெரிதும் நடித்தார் அதன் மூலம் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை தன்வசப்படுத்திக் கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து அது போன்ற கதைகளில் நடித்து வருவதால் மேல் வெற்றியை குவித்தார் தற்போது ரஜினிக்கு அடுத்த இடத்தை விஜய் தான் தன் வசப்படுத்தி உள்ளாராம். அந்த அளவிற்கு சினிமா உலகில் தனது மார்க்கெட்டை உயர்த்தி உள்ளார்.

தற்போது தளபதி விஜய் தனது 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படமும் ஒரு ஆக்ஷன் படமாக தான் உருவாகி வருகிறது. இப்படி ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களையும் தாண்டி உலக அளவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.

இந்தநிலையில் தளபதி விஜயின் மீது பற்றுக்கொண்ட கன்னட ரசிகர்கள் சென்னையிலுள்ள உறையூரில் விஜயின் மக்கள் மன்ற அலுவலகத்தில் ஒரு புதிய சிலையை கன்னட ரசிகர்கள் நிறுவியுள்ளனர்.

சிலை திறக்கப்பட்டு அது விழா போல கொண்டாடினர் ரசிகர்கள் அதன் புகைப்படங்களும் தற்போது இணைய தள பக்கத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகைகளுக்கு தான் சிலை அமைத்து வந்த காலம் போய் தற்போது நடிகர்களுக்கும் சிலை அமைக்கும் காலம்  மாறி உள்ளது என கூறியும் வருகின்றனர்.

vijay
vijay