தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்தது ரசிகர்கள் நல்ல வரவேற்பு இருந்தாலும் இவர் திரைப்படங்களில் கேரக்டர்களில் நடித்து அதில் ஒன்று கள்ளத்தனமான நடுவே வைத்து அரசியல் மத்தியில் நீங்க முடியாத இடத்தைப் பிடித்த நடிகர்களை பற்றி தான் தற்போது நாம் பார்த்திருக்கிறோம்.
நடிகர் ரஜினிகாந்த் :- இவர் பதினாறு வயதினிலே என்ற திரைப்படத்தில் ஒரு வில்லத்தனமான நடிப்பில் காட்டி சேரும் இடம் பிடித்தாலும் சங்கரின் இயக்கத்தில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் ஒரு மிகப்பெரிய வில்லத்தனத்தை காட்டி ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். அதிலும் குறிப்பாக தனது பாணியில் வசி மே.. என்ற டயலாக் அந்தப் படத்திற்கு ஒரு ப்ளஸ் ஆக அமைந்தது கூட சொல்லலாம்.
கமல் :- அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னால் உலகையே தனது படைப்பை திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகர் கமல்ஹாசன். இவர் ஆளவந்தான் என்ற திரைப்படத்தில் ஒரு சைக்கோ வில்லனாக நடித்து ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
அஜித் :- இயல்பான நடிப்பை கொண்டு அன்றைய காலகட்டத்தில் சாக்லேட் பாயாக இருந்தவர் நடிகர் அஜித்குமார் இவர் ஆரம்ப கட்டத்தில் சாக்லேட் பாயாக தான் நடிக்க இருந்தார் பின்னர் அதையெல்லாம் மாற்றி ஒரு மாற்றுத்திறனாளியாக வரும் தங்கள் ஆட்சியின் மீது ஆசைப்படும் கொடூரணாக்கவும் நடித்திருந்தார்.
விஜய் :- விஜய் நடிப்பில் வெளியான அழகிய தமிழ்மகன் திரைப்படம் தோல்வியை தழுவினாலும் அதில் உன்னால் முடியும் உன்னால் முடியும் தம்பி பாடல் இன்று வரைக்கும் ரசிகர்களால் புகழப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய் அவர்கள் இரண்டு கேரக்டர்களில் நடித்து இருப்பார். அதில் ஒரு கேரக்டர் வில்லனாகவும் நடித்து அசத்தியிருப்பார்.
விக்ரம்:- தமிழ் சினிமா எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது உடலை அமைத்துக் கொண்டு நடிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தவர் நடிகர் விக்ரம். இவர் இருமுகன் என்ற திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார் அதில் ஒரு வேடத்தில் டாக்டர் லவ் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பியிருப்பார் நடிகர் விக்ரம்.
விஜய் சேதுபதி:- தமிழ் சினிமாவில் திருநங்கை, முதியவர், வில்லன் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தில் நடித்து தற்போது மக்கள் செல்வன் என ஆசையோடு அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ரஜினிகாந்த் நடித்த பேட்டை திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஆரம்பித்து பின்னர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திலும் வில்லனாக கலக்கியிருப்பார்.
மேலும் 24 திரைப்படத்தில் சூர்யா, மன்மதன் படத்தில் சிம்பு, மாரி திரைப்படத்தில் தனுஷ், ஆதிபகவன் திரைப்படத்தில் ஜெயம் ரவி, காஷ்மோரா திரைப்படத்தில் கார்த்தி, போன்ற பல நடிகர்கள் தனது வில்லத்தனமான நடிப்பைக் காட்டி ரசிகர் மத்தியில் கொண்டாடப் பட்டு வருகிறார்கள்.