நடிகர் பிரபாஸ் தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக மாறி உள்ளார். காரணம் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு பெயரையும், புகழையும் அவருக்கு சம்பாதித்து கொடுத்தது அதை தொடர்ந்து மிகப்பெரிய பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் தனது சம்பளத்தை பல கோடி உயர்த்தி தற்போது வெற்றி நடை கண்டு வருகிறார். பிரபாஸ் கையில் தற்போது ராதே ஷ்யாம், சலார், ஆதி புரூஷ் மற்றும் ப்ராஜெக்ட் கே ஆகிய படங்கள் இருக்கின்றன அதில் சில திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிரபாஸ் ப்ராஜெக்ட் ஏகே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் ஹிந்தியில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் தீபிகா படுகோன் நடிகர் பிரபாஸ்க்கு ஜோடியாக நடிப்பதாக தெரியவந்துள்ளது இந்த திரைப்படத்தை நாக் அஸ்வின் என்பவர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முதல் கட்ட முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் பிரபாஸ் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு எப்போதும் மதிய உணவை பரிசாக கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கூட சலார் படத்தில் நடித்தபோது சுருதிஹாசனுக்கு மதிய உணவு கொடுத்து அசத்தினார் அவரை தொடர்ந்து தற்போது தீபிகா படுகோன்னுக்கும் மதிய உணவை அனுப்பி வைத்து அசத்தி உள்ளார்.
நடிகை தீபிகா படுகோன் அந்த புகைப்படத்தை வெளியிட்டு உங்களுக்கு தெரிந்தால் உங்களுக்கு தெரியும் என அவர் பதிவிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.