லாஸ்லியா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்.! பிறந்த நாளில் இதை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.!

losliya-03

கடந்த நான்கு வருடங்களாக பிரபல விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. எனவே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து நடிகர்,நடிகைகளும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்து திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துவிடும்.

அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் லாஸ்லியா. இந்நிகழ்ச்சிக்கு முன்பு இவர் யாரென்று தமிழ் ரசிகர்கள் யாருக்குமே தெரியாது. ஆனால் தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருகிறார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ஆர்மி உருவாகி உள்ளது. இந்நிலையில் லாஸ்லியாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் லாஸ்லியாவுக்கு என்னென்ன பிடிக்கும் என்பதை இணையதளத்தில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

1.அந்த வகையில் லாஸ்லியாவுக்கு தனது இளம் பருவத்திலிருந்தே தமிழ் மீது அதிக ஆர்வம் இருந்ததால் செய்தி வாசிப்பாளராக பணியாற்ற வேண்டும் என்ற கனவு இருந்ததாம். அதை நிறைவேற்றும் வகையில் பள்ளிப்பருவம் முடிந்தவுடன் செய்தி வாசிப்பாளராக இலங்கையில் பணியாற்றி வந்தாராம்.

2. லாஸ்லியாவுக்கு முயற்சி செய்வது என்றால் மிகவும் பிடிக்குமாம் அந்த வகையில் தான் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாராம். இதன் மூலம் தற்போது இவர் கோலிவுட்டில் தவிர்க்கமுடியாத நாயகியாகவும் வலம் வருகிறார்.

losliya 04
losliya 04

3. தமிழ் சினிமாவில் இவருக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இவர்கள் தான் லாஸ்லியாவின் ஃபேவரட்  நடிகர்களாம். அதிலும் தளபதி விஜய் உடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறாராம்.

4. தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் தைரியமான பெண்ணாகவும், கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. லாஸ்லியாவிற்கு நடிகை ஆண்ட்ரியாவை தான் மிகவும் பிடிக்குமாம்.

5. இவருக்குப் பிடித்த கலர் வெள்ளை நிறமாம் பொதுவாக லைட் கலர்  உடை தான் அணிவாராம். இவருக்கு மாடல் உடையை அணிவதை விட பாரம்பரிய சேலை அணிவது தான் மிகவும் பிடிக்குமாம்.

6. லாஸ்லியாவை ரசிகர்கள் செல்லமாக லியா என்று தான் அழைப்பார்கள். ஆனால்  அவரின் வீட்டில் பிரியங்கா அல்லது பிங்கி என்றுதான் அழைப்பார்களாம். இப்படி கூப்பிட்டால் தான்  லாஸ்லியாவிற்க மிகவும் பிடிக்குமாம்.

7. லாஸ்லியாவிற்கு இலங்கையிலுள்ள திருங்கோண மலை தான் மிகவும் பிடிக்குமாம். விடுமுறை கிடைத்துவிட்டால் உடனே இலங்கையிலுள்ள திருகோண மலைக்கு சென்று விடுவாராம்.