ஏராளமான பிரபலங்கள் தங்களுடைய நிஜ வாழ்க்கையில் நல்ல ஒரு வேலையில் இருந்தாலும் கூட சினிமாவில் இருந்த ஆர்வம் காரணத்தினால் சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்தவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய ஏழாவது திருமண நாளில் மறைந்த கணவர் சேதுராமனை நினைத்து அவருடைய மனைவி மிகவும் உறக்கமான பதிவை கண்ணீரோடு பதிவிட்டுள்ளார்.
தோல் மருத்துவரான சேதுராமன் நடிப்பில் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக அமைந்திருந்த நிலையில் சந்தானம், பவர் ஸ்டார் ஆகியோர்களுடன் இணைந்து சேதுராமன் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் இந்நிலையில் இவர் கடந்த 2020ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இவருக்கு உமையாள் என்ற மனைவியும் ஒரு மகளும் இருக்கின்றனர் மேலும் இவருடைய மறைவின் பொழுது உமையாள் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். அந்த வகையில் சேதுராமன் இறந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது எனவே தன்னுடைய கணவர் தான் தனக்கு மகனாக பிறந்து இருக்கிறார் என உருக்கமான பதிவை வெளியிட்டு இருந்தார் உமையாள்.
இந்நிலையில் பிப்ரவரி 14-ம் தேதி அன்று இவர்களுடைய திருமண நாளில் உமையாள் தனது கணவர் சேதுராமனை நினைத்து மிகவும் உருக்கமான பதிவை பதிவிட்டு இருந்தார். அதில், இதே நாளில் ஏழு ஆண்டுகள் திரும்பிப் பார்க்கும் பொழுது காலங்கள் எப்படி கடந்து விட்டது என்பதை உணர்கிறேன் நம்மைச் சுற்றி அனைத்தும் மாறிவிட்டது ஆனால் அங்கு காதல் மட்டும் அப்படியே இருக்கிறது.
உங்களுக்கு அழிவே கிடையாது எப்போதும் நீங்கள் வானத்தைத் தொட நினைக்கும் ஒரு சிறந்த மருத்துவர் தான் உங்கள் மீதான என்னுடைய காதலும் எப்பொழுதும் அழியாது இந்த திருமண நாளை நாம் எப்பொழுதும் கொண்டாடியது இல்லை ஏனென்றால் உங்களுக்கு வெளி காட்டுவது பிடிக்காது ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நான் இந்த நாளை வெளிக்காட்டி அந்த மகிழ்ச்சியான நினைவுகளை எண்ணி மகிழ்ந்தேன். இனிவரும் காலங்களிலும் இதையே நான் செய்வேன் இனிய ஏழாவது திருமண நாள் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இப்படிப்பட்ட இவருடைய பதிவு அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.