80 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பலமொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தார். மேலும் இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவர் சந்திக்காத கிசுகிசுக்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு நடிகை ஸ்ரீதேவி கிசுகிசுக்கப்பட்டார்.
இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவியை பிரபல உச்ச நட்சத்திரம் ஒருவர் காதலித்து வந்ததாகவும் அதன் பிறகு அவர் மீது உள்ள மோகத்தினால் ஸ்ரீதேவியின் வீடு வரை சென்று பெண் கேட்டதாகவும் பிரபலம் ஒருவர் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அதாவது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியவர் என்று தான் சொல்ல வேண்டும். ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இவர் 80-களில் நடிகை ஸ்ரீதேவியை காதலித்து வந்தாராம் அது மட்டுமல்லாமல் அவர் மீது உள்ள காதல் முற்றி போனதால் ஸ்ரீதேவியின் அம்மாவிடம் நேரடியாக சென்று பெண் கேட்டு இருக்கிறார். ஆனால் ஸ்ரீதேவியின் அம்மா இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
அதாவது தன்னுடைய மகள் இப்போதுதான் சினிமாவில் ஒரு நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறார் அதற்குள் அவருக்கு கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை ஆகையால் இத்துடன் நீங்க கேட்டதை மறந்து விடுங்கள் என்று மூஞ்சியில் அடித்தது போல ரஜினியை அவமானப்படுத்தி வெளியே அனுப்பி விட்டார் என்று பிரபலம் ஒருவர் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
சினிமாவில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை வீடியோ மூலம் வெளிக்கொண்டு வந்த பிரபல பைல்வான் ரங்கநாதன் அவர்கள் தான் இந்த விஷயத்தை ஒரு வீடியோ மூலம் பகிர்ந்து உள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.