அரசியல்வாதியாகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ஏராளமான வெற்றி பெற படங்களை தந்து வரும் நிலையில் ஒரு சூப்பர் ஹிட் பட வாய்ப்பு தவற விட்டுள்ளார் இது குறித்து சமீப பேட்டி ஒன்றில் கூற அந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்பொழுது அரசியலில் பிஸியாக இருந்து வருவதால் சினிமாவில் இருந்து மொத்தமாக விலக இருக்கிறார். அந்த வகையில் இவருடைய கடைசி படம் மாமன்னன் என கூறப்படுகிறது மேலும் இந்த படத்தினை அடுத்து இவர் கமலஹாசன் அவர்களுடைய தயாரிப்பில் மற்றொரு படம் ஒன்றில் நடிப்பார் என கூறியிருந்த நிலையில் ஆனால் அந்த படம் சில காரணங்களால் வேண்டாம் என முடிவெடுத்துள்ளார்.
மேலும் கடந்த வருடம் கலக தலைவன், நெஞ்சுக்கு நீதி போன்ற படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் சேப்பாக்கம் தொகுதியின் அமைச்சர் மட்டுமல்லாமல் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராகவும் பதவி ஏற்றிருக்கும் நிலையில் மிகவும் அரசியலில் பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமீப பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உருவாகி இருந்த தடம் படத்தில் முதலில் இவர்தான் நடிக்க இருந்தாராம் இதற்காக மகிழ்ச்சிறுமேனி ஒன்றரை வருடங்களாக காத்திருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் நடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் அதன் பிறகு தான் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் பெற்றதாகவும் கூறினார்.
மேலும் தடம் படத்திற்கு பிறகு உதயநிதிய அட்வான்ஸ் கொடுத்தாராம் அந்த நேரத்தில் விஜய் மகிழ் திருமேனியை அழைத்து கதை கேட்டு விட்டு மிகவும் படித்து விட்டதாக கூறியதால் மகிழ் திருமேனி விஜயை முடித்துவிட்டு வரலாமா என கேட்க அதற்கு உதயநிதி முடியாது ஏற்கனவே ஒரு படம் மிஸ் ஆயிடுச்சு என கூறியதாக சமீபத்தில் கூறியுள்ளார்.