அமைச்சர் பதவியில் இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இதற்கு மேல் முழுவதும் அரசியலில் இறங்க வேண்டும் என்பதற்காக கடைசியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்து வருகிறது.
மேலும் வசூலையும் குவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இரண்டு வாரங்களை கடந்த மவுஸ் குறையாமல் நல்ல வரவேற்புடன் கூடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது வரையிலும் எவ்வளவு வசூல் செய்திருப்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியான மாமன்னன் படம் சமுதாயத்தில் நிலவும் சாதி ஏற்றத்தாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.
அப்படி சிலர் நெகட்டிவ் கமெண்ட்களை கொடுத்து வந்தாலும் பலரும் இது அனைவருக்கும் பார்க்க வேண்டிய படம் என கூறி வருகின்றனர். எனவே திரையரங்குகளில் கூட்டம் குவிந்து வரும் நிலையில் உலகம் முழுவதும் தற்பொழுது வரையிலும் மாமன்னன் திரைப்படம் 65 கோடி வசூலை குவித்து இருக்கிறது. இந்த வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 50 கோடியையும், வெளிநாடுகளில் 15 கோடியையும் மாமன்னன் வசூல் செய்துள்ளது.
இவ்வாறு சினிமாவிற்கு அறிமுகமானதிலிருந்து உதயநிதி ஸ்டாலினின் எந்த படமும் இந்த அளவிற்கு வெற்றி பெறாமல் இருந்து வரும் நிலையில் கடைசி படமாக இருந்தாலும் தரமான சம்பவத்தை செய்துள்ளார். எனவே உதயநிதிக்கு மாமன்னன் தேசிய விருதை பெற்று தரவும் வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.
இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாஸில் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அப்படி உதயநிதி மட்டுமல்லாமல் இவர்களும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். வடிவேலு இதுவரையிலும் காமெடி கேரக்டரில் நடித்து வந்த நிலையில் முதன் முறையாக சீரியஸான கேரக்டரில் நடித்திருப்பது ரசிகர்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது. உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் தமிழக திரையரங்குகள் ரிலீஸ் உரிமை கைப்பற்றிய நிலையில் இதனை அடுத்து கண்டிப்பாக 100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.