உதயநிதி ஸ்டாலின் சினிமா உலகில் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பாகவே ரெட் ஜெயண்ட்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் தொடர்ந்து நல்ல நல்ல படங்கள் தயாரித்து முன்னணி தயாரிப்பு நிறுவனம் என்ற அந்தஸ்தை பெற்றது. இருந்தாலும் அண்மை காலமாக படங்களை விநியோகம் செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறது.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் அண்மையில் சொன்னது படத்தை தயாரிப்பதை விட விநியோகம் செய்வது ரொம்ப ஈசி அதனால் தான் அதில் அதிகம் ஈடுபடுவதாக சொன்னார். அண்மையில் கூட ரெட் ஜெயண்ட்ஸ் மூவி நிறுவனம் உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் திரைப்படத்தை விநியோகம் செய்தது அந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது.
அதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் நல்ல காசு பார்த்தார் அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நல்ல நல்ல படங்களை விநியோகம் செய்து வருகிறார் அந்த வகையில் இப்பொழுது நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படத்தையும் விநியோகம் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. நான் நிறைய திரைப்படங்களை விநியோகம் செய்து இருக்கிறேன் அதில் பெரும்பாலான படங்களை பார்த்துவிட்டு விநியோகம் செய்வேன் ஒரு சில காரணங்களால் படங்களை பார்க்காமல் கூட நம்பி விநியோகம் செய்து இருக்கிறேன் அப்படி ஒரு தடவை எனது நண்பரும் நடிகருமான ஆர்யா கேப்டன் திரைப்படத்தில் நடித்திருக்கிறேன்.
அந்த படம் ப்ரடேட்டர் லெவலுக்கு சூப்பராக இருந்து வந்துள்ளது. அதனால் அந்த படத்தை விநியோகம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார் நானும் படத்தை பார்க்காமலேயே சரியான ஓற்றுக் கொண்டேன். ஆனால் படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று மொக்கையாக ஓடியது என பேட்டியில் கலாய்த்து பேசினார்.