தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்களின் படங்கள் விசேஷ நாட்களில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெறும் அந்த வகையில் நடிகர் அஜித்குமார் விசேஷ நாட்களில் படத்தை ரிலீஸ் செய்து அதை திருவிழா போல மாற்றுகிறார் அப்படி நீண்ட இடைவேளைக்கு பிறகு பொங்கல் தினத்தை முன்னிட்டு அஜித் நடித்த துணிவு படம்.
கோலாகலமாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஹச். வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் படத்தை எடுத்துள்ளார் படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகி உள்ளது இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா..
சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் ஆனால் அதற்கு முன்பாகவே படக்குழு ரசிகர்களை சந்தோஷப்படுத்த ரெடியாக இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தின் முதல் பாடல் வெகு விரைவிலேயே வெளிவர இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவி நிறுவனம் தான் தமிழகத்தில் அஜித்தின் துணிவு திரைப்படத்தை ரிலீஸ் செய்கிறது. உதயநிதி ஸ்டாலின் படத்தின் பிரமோஷனுக்கு அஜித்தை கலந்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அஜித் வழக்கமாக சொல்லும் பதிலையே இப்பொழுதும் சொல்லி உள்ளார் ஆம் தன்னால் வரமுடியாது என அஜித் கூறியதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின் துணிவு திரைப்படம் செம்மையாக வந்திருக்கு என அப்டேட் கொடுத்துள்ளார் இந்த தகவல் தற்பொழுது அஜித் ரசிகர்களிடையே துள்ளல் ஆட்டம் போட வைத்துள்ளது.