தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக பார்க்கப்படுபவர் உதயநிதி ஸ்டாலின் இவர் முதலில் ரெட் ஜெயன்ட் மூவி நிறுவனத்தை தொடங்கினார். பிறகு தொடர்ந்து நல்ல நல்ல படங்களை தயாரித்து வெற்றி கண்டார் ஒரு கட்டத்தில் இவரே ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார்.
முதலில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் நடித்து வெற்றியை கண்டார் அதன் பின் ஏகப்பட்ட படங்கள் இவருக்கு வெற்றி கொடுத்தன.. இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென அரசியலிலும் உள்ளே புகுந்தார் தற்பொழுது எம்எல்ஏவாக சிறப்பாக பயணித்து வருகிறார்.. இப்போ மூன்றிலுமே இவர் கவனம் செலுத்து வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் கையில் மாமன்னன், கலகத் தலைவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் மறுபக்கம் ரெட் ஜெயண்ட்ஸ் மூவி பல டாப் ஹீரோக்களின் படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்து வருகிறது கடைசியாக கூட கமலின் விக்ரம் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்து மிகப்பெரிய லாபத்தை பார்த்தது.
அதனை தொடர்ந்து இப்பொழுது நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தையும் தமிழகத்தில் இந்த நிறுவனம் தான் வெளியிட இருக்கிறது. இதனால் உதயநிதி ஸ்டாலினுக்கு நாலாபக்கமும் காசு குவிந்து கொண்டுதான் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினியின் அண்ணாத்த மற்றும் விஜயின் பீஸ்ட் படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
விஜயின் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் மிகப்பெரிய வசூலை அள்ளி அசத்தியது. ஆனால் அண்ணாத்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை என கூறியுள்ளார். இவர் இவ்வாறு கூறியது தற்போது விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே மோதலை ஏற்படுத்தியிருக்கிறது.