மூன்றாவது திரைப்படத்தை இயக்க ரெடியான உதயநிதி ஸ்டாலின் மனைவி.! ஆனால் ஹீரோ அஸ்வின் கிடையாது. இவர்தான்.!

தற்பொழுது சினிமாவில் பல பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா ஸ்டாலின்.  இவர் வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இருந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களில் வணக்கம் சென்னை வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் காளி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.  முதலுக்கு மோசம் இல்லாமல் இருந்தது.

இதனை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அஸ்வினை வைத்து கிருத்திகா  உதயநிதி இவரின் அடுத்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது கிருத்திகா ஸ்டாலின் தெலுங்கு மற்றும் தமிழில் சினிமாவில்  முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயராமின் மகன் காளிதாசை வைத்து தனது மூன்றாவது திரைப்படத்தை இயக்க உள்ளாராம். எனவே அஸ்வினின் ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

நடிகர் அஸ்வின் இதற்கு முன்பு துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஆதித்ய வர்மா திரைப் படத்தில் விக்ரமின் அண்ணனாக நடித்தார். இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களிலும், சின்னத்திரையில் சில சீரியல்களிலும் நடித்து பிரபலம் அடைந்தார்.