நடிப்பிற்கு பெயர்போன உலகநாயகன் கமலஹாசன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்தப் படத்தை முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படமாக எடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.
படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் கமலுடன் சேர்ந்து சூர்யா விஜய் சேதுபதி பகத் பாசில் நரேன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது இந்த படம் வெளிவருவதற்கு முன்பாக படத்தில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து.
ரசிகர்களை கவர்ந்து இழுத்து வைத்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் படம் உலக அளவில் மொத்தம் 5000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் தமிழகத்தில் மட்டும் 1000 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் திரைப்படத்தை பார்த்த நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறி உள்ளது. விக்ரம் படம் சூப்பர் உலக நாயகனுக்கு நன்றி sure blockbuster என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை அறிந்த ரசிகர்கள் ஒரு நடிகரே இவ்வாறு பதிலளித்துள்ளார் நிச்சயம் கமலின் விக்ரம் திரைப்படம் பெரிய லெவலில் இருக்கும் அதோடு மட்டுமல்லாமல் முதல் நாளே மிகப்பெரிய ஒரு வசூல் சாதனை படைக்கும் எனவும் கூறி இந்த செய்தியை பரப்பி வருகின்றனர்.
#Vikram super👏🏽👍🏼👍🏼👏🏽thx to ulaganayakan @ikamalhaasan sir @Dir_Lokesh @VijaySethuOffl @anirudhofficial #Fahad @turmericmediaTM and the whole team for this movie experience ! Sure blockbuster !
— Udhay (@Udhaystalin) June 1, 2022