வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்யும் உதயநிதி மனைவி..! அடேங்கப்பா இவங்க அலப்பறைக்கு அளவே இல்லாம போச்சு..!

udhaya
udhaya

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருவது மட்டும் இல்லாமல் மிக பிரபலமான தயாரிப்பாளராகவும் அரசியல்வாதியாகவும் தன்னுடைய திறனை வெளிக்காட்டி வருபவர் தான் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சினிமாவில் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறாரோ அதேபோல அவருடைய மனைவி கிருத்திகாவும் சினிமாவில் ஈடுபாடை காட்டி வருகிறார்.

அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பாக வணக்கம் சென்னை என்ற திரைப்படம் வெளியானது இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா அவர்கள் நடித்திருப்பார் அதேபோல விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காலி என்ற திரைப்படத்தையும் இவர்தான் இயக்கியிருந்தார்.

அந்த வகையில் இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது இவர் அடுத்ததாக பேப்பர் ராக்கெட் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் பெயர் பேப்பர் ராக்கெட் என்பதன் காரணமாக இதனை வித்தியாசமான முறையில் மக்களிடையே பிரபலப்படுத்த உள்ளார்கள்.

அந்த வகையில் இந்த ட்ரெய்லர் வெளியிட்டு விழாவிற்கு வரும் பல்வேறு ரசிகர்களுக்கும் பேப்பர் ராக்கெட் கையில் கொடுத்து அவர்களை வரவேற்பது மட்டுமில்லாமல் மேடையில் அந்த ராக்கெட்களை பறக்க விடும் வகையில் ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ் சினிமாவில் உலகநாயகன் என போற்றப்படும் நடிகர் கமலஹாசனை அழைத்துள்ளார்கள் ஆனால் அவர் மிகவும் பிசியாக தற்போது இருப்பதன் காரணமாக இதில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.

rocket
rocket

இருந்தாலும் பல்வேறு திரைப்படங்களும்  ஓகே நட்சத்திரங்களும் இந்த டீசல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு மிகவும் சிறப்பித்துக் கொடுத்துள்ளார்கள் அந்த வகையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பது ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது.