விக்ரமின் வசூல் சாதனையை பார்த்து மிரண்டு போன உதயநிதி.! என்ன கூறியுள்ளார் பாருங்க..

vikram-movie
vikram-movie

தென்னிந்திய சினிமாவின் உலக நாயகனான கமலஹாசன் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில்  மாஸாக ஆக்ஷன் திரில்லர் படமாக விக்ரம் திரைப்படம் வெளிவந்து உலகம் முழுவதும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.  மேலும்  உலக பாக்ஸ் ஆபிஸில் ஒவ்வொரு நாளும் புதிய சாதனையை படைத்து வருகிறது.

இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அன்பின் அடையாளமாக சூர்யா லோகேஷ் கனகராஜ் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு கமலஹாசன் பரிசளித்து அனைவரையும் ஊக்கப்படுத்திவுள்ளார். தற்பொழுது தமிழ் சினிமா அனைத்து சினிமா உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த புஷ்பா, ஆர்ஆர்ஆர்,கே.ஜி.எஃப் 2 போன்ற திரைப்படங்கள் தெலுங்கு திரைப்படமாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது மேலும் இத்திரைப்படம் இந்திய திரைவுலகில் வசூல் சாதனை படைத்து மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது.

மேலும் இதற்கு தக்க பதிலடி கொடுத்து கோலிவுட்டை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பாக்ஸ் ஆபீஸில் சிறப்பாக செயல்பட்டு சாதனை படைத்து வருகிறது விக்ரம் திரைப்படம். தமிழ் திரைப்படங்களில் பான் இந்தியா படமாக இடம் பெற வேண்டும் என பலரின் ஆசையாக இருந்து வந்தது.

இவ்வாறு முதன்முறையாக விக்ரம் திரைப்படம் இதனை நிறைவேற்றி உள்ளது. பலரும் இந்த திரைப்படத்தின் வெற்றியை பற்றிய பெருமை கூறி வரும் நிலையில் தற்பொழுது ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பாளரும்,  நடிகரும், விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் விக்ரம் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்து அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் இந்த வார இறுதியில் விக்ரம் அதிக பாக்ஸ் ஆபீஸ் சாதனையை முறியடிக்கும் போல் தெரிகிறது.  இது நம்ப முடியாத வசூலாக இருக்கிறது மேலும் கமலின் கேரக்டரில் மிக வேகமாக ரூபாய் 200 கோடி வசூல் செய்த படம் விக்ரம் படம் என்பது குறிப்பிடத்தக்கது.