விஜய்க்கும் தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனக் கூறிய உதயநிதி.! லியோ ரிலீஸ்ல தெரியும்..

udhaiyanithi
udhaiyanithi

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எனக்கும் விஜய்க்கும் எந்த பிரச்சனையும் இல்லை என கூறி இருப்பது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் வைத்து படங்கள் இயக்குவதிலும், தயாரிப்பதிலும், அந்த படத்தினை திரையரங்குகளில் வெளியிடுவது என அனைத்திலும் ஏராளமான பிரபலங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகும் என படக் குழு தெரிவித்துள்ளது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியினை கண்டு வரும் நிலையில் லியோ திரைப்படம் எதிர்பாராத அளவிற்கு மாஸ் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏற்கனவே மாஸ்டர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த படத்தினை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கமல், விஜய் சேதுபதி, பகத் பாஸில் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து விக்ரம் திரைப்படத்தினை இயக்கியிருந்தார் இந்த படம்  மிகப்பெரிய வெற்றினை கண்டது.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் உதயநிதி விஜய் குறித்து பேசி உள்ளார் அதாவது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் இருந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் விரைவில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் உதயநிதி மற்றும் விஜய் இருவரும் கடந்த ஒன்றரை வருடங்களாக எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இருந்து வந்திருக்கும் நிலையில் தற்போது விஜய்க்கும் தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

எனவே லியோ திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் லியோ திரைப்படத்தினை ரிலீஸ் செய்யும் பொழுது இது குறித்து தெரியவரும்.