கமலஹாசனுக்கு அம்பேத்கர் சிலையை பரிசாக வழங்கிய உதயநிதி ஸ்டாலின்..? அதுவும் எதற்காக தெரியுமா..?

kamal udhayanithi-1

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்று போற்றப்படும் நடிகர் தான் கமல்ஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்த மாபெரும் வெற்றி கண்டுள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தினை கமலஹாசன் அவர்கள் தன்னுடைய ராஜகமால் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தயாரித்தது மட்டுமின்றி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரம்மாண்டமாக வெளியிட்டு சாதனை படைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேலாக வசூல் செய்து மிகப் பெரிய  சரித்திரம் படைத்தது என்று சொல்லலாம்.

அதேபோல உதயநிதி ஸ்டாலின் அவர்கள் போனி கபூர் தயாரிப்பில் சமீபத்தில் நடித்த திரைப்படம் தான் நெஞ்சுக்கு நீதி இந்த திரைப்படத்தினை அருண் ராஜா காமராஜர் அவர்கள் இயக்கியிருந்தார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று மிக பெருமளவு வசூலை செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை  சமீபத்தில் கமலஹாசன் அவர்கள் பார்த்துவிட்டு அந்த பட குழுவினர்கள் அனைவரையும் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார் அப்பொழுது போனி கபூர் உதயநிதி ஸ்டாலின் அருண் ராஜா காமராஜ் ஆகியோர்கள் நேரில் பாராட்டி உள்ளார்.

kamal udhayanithi-1
kamal udhayanithi-1

அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி படமாக்கிய உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசு ஒன்றையும் கமலஹாசன் அவர்கள் வழங்கி உள்ளார். அதேபோல உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  நெஞ்சுக்கு நீதி படக் குழுவின் சார்பாக அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலையை பரிசாக வழங்கியுள்ளார்.

மேலும் இவ்வாறு தங்களை பாராட்டியதன் காரணமாக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்தது மட்டுமில்லாமல் இந்த பரிசினை விக்ரம் திரைப்படத்தில் தன்னுடன் பங்கேற்றுவதற்கான நினைவு பரிசாக அவர் வழங்கி உள்ளார்.

kamal udhayanithi-1

இவ்வாறு நடைபெற்ற அந்த சம்பவம் ஆனது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.