தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு முன்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அது மட்டுமல்லாமல் நடிகர் கமல் சினிமாவில் இருந்து சிறிது கேப் எடுத்துக் கொண்ட பிறகு வெளியான முதல் திரைப்படமான விக்ரம் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் தற்போது தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதி நிறைவடைந்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தகவல் கிடைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் படங்களில் நடிப்பது மட்டும்மல்லாமல் தயாரித்தும் வருகிறார்.
அந்த வகையில் தற்போது நடிகர், அரசியல்வாதி, விநியோகஸ்தர், என பல தொழில்களில் பிஸியாக இருந்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருந்தார். இன்று அமைச்சராக பொறுப்பேற்று உள்ள உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டதாக தற்போது தகவல் ஒன்று ஊடகத்தில் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவி ஏற்கிறார். மேலும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையை உதயநிதி தான் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் உதயநிதியை வைத்து ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்று இருந்தாராம் அதுமட்டுமல்லாமல் உதயநிதியும் அதற்கு ஒப்புக்கொண்டார் இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்கப் போவதில்லை என்று தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டு ரசிகர்களை கொஞ்சம் சோர்வடைய வைத்துள்ளார்.