தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் அண்மை காலமாக வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசத்தி வருகிறார். இப்பொழுது கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 169 ஆவது திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டு தற்பொழுது சென்னையில் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய பொருள் செலவில் தயாரித்து வருகிறது அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், கன்னட டாப் ஹீரோ சிவராஜ் குமார், வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.
ஜெயிலர் படம் முழுக்க முழுக்க சிறைச்சாலையை மையமாக வைத்து உருவாகும் என தெரிய வருகிறது இதுவரை ஜெயிலர் படபிடிப்பு தளத்தில் இருந்து ஒரு சில புகைப்படங்களும் லீக் ஆகி உள்ளன. இப்படி இருக்கின்ற நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடி யார் என்பது மட்டும் இதுவரை சரியாக தீர்மானிக்கப்படாமலேயே இருந்து வருகிறது.
ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிப்பார் என சொல்லப்பட்டது. பின் தமன்னாவுக்கு ஹீரோயின் கதாபாத்திரம் எல்லாம் கிடையாது ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்து போவார் என சொல்லப்பட்டது தற்பொழுது என்னவென்றால் நடிகை சதா, சுனைனா ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனால் இந்த படத்தில் மொத்தம் ரஜினிக்கு மூன்று ஜோடிகளா அல்லது இரண்டு ஜோடிகளா என்பது தெரிவில்லை அதே சமயம் இது குறித்து தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை ஆனால் இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது