வில்லன் கதாபாத்திரத்தில் சூப்பர்ஸ்டாரை மிரட்டிய இரண்டு வில்லன்கள்..! இவங்க நடிப்புக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது..!

rajinikanth-1
rajinikanth-1

தமிழ் சினிமாவில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து தற்போது பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகரை ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என தலையில் தூக்கி கொண்டாடுவது மட்டுமில்லாமல் இந்த காலகட்டத்திலும் இவர் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது அந்த வகையில் அவர் வில்லனாக மிரட்டிய திரைப்படங்கள் என்றும் ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது இந்நிலையில் சூப்பர் ஸ்டார் வியக்கவைக்கும் அளவிற்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

பொதுவாக ரஜினி நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படம் யாராலும் மறக்கமுடியாத திரைப்படமாக அமைந்தது அந்த திரைப்படத்தில் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான ரகுவரன் இவர் நடிப்பு மிகவும் பிரபலமாக இருந்தது மட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டாருடன் இந்த திரைப்படத்தில் போட்டி போட்டு தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி இருப்பார்.

மேலும் தமிழ் சினிமாவில் இவருடைய நடிப்பை மிஞ்ச ஒரு வில்லன் கிடையாது ஏனெனில் அந்த அளவிற்கு இவர் ரஜினிக்கு சவால் விடும் அளவிற்கு தன்னுடைய நடிப்பு திறனை வழிகாட்டுவார் அதேபோல கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் தான் படையப்பா திரைப்படம் இந்த திரைப்படத்தில் சிவாஜி சௌந்தர்யா என பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

மேலும் இதில் நீலாம்பரி என்ற நெகட்டிவ் கேரக்டரில் நடித்தவர்தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த திரைப்படத்தை இவருடைய திமிரான பார்வையும் பேச்சும் ரசிகர்களை வியக்க வைத்தது மட்டுமில்லாமல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

அந்தவகையில் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பை பார்த்து ரஜினிகாந்த் வியந்து பார்த்ததாகவும் பொது மேடைகளில் பேசியுள்ளார் அந்த வகையில்  ரஜினியின் வாழ்க்கையில் மறக்க முடியாத வில்லன் நடிகர்கள் என்றால் இவர்கள் இருவரும் தான்.