சினிமா உலகில் எப்பொழுதுமே காமெடி கலந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது அந்த வகையில் அர்ஜுன் நடிப்பில் சுராஜ் மற்றும் வேணு ரவிச்சந்திரன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் மருதமலை இந்த படம் முழுக்க முழுக்க காமெடி படமாக இருந்தாலும் அதே அளவிற்கு சென்டிமென்ட் இருந்தது.
படத்தில் அர்ஜுனுடன் இணைந்து வடிவேலு, மீரா சோப்ரா, ரகுவரன், நாசர் உள்பட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். படத்தின் ஒவ்வொரு சீனும் அற்புதமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடி படம் வெற்றி கண்டது. ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க வேண்டியது அர்ஜுன் இல்லை.. வேறு இரண்டு டாப் ஹீரோக்கள் தானாம்..
இயக்குனர்கள் முதலில் இந்த படத்தின் கதையை எழுதிவிட்டு இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித்தை முதலில் சந்தித்து கதையை கூறி உள்ளனர் ஆனால் அவர் இந்த கதையை நிராகரிக்க பின் நடிகர் விஜயிடம் மருதமலை படத்தின் கதையை சென்று இருக்கிறது.
அவருக்கும் இந்த கதையில் நடிக்க விருப்பம் தெரிவிக்காததால் கடைசியாக ஆக்சன் கிங் அர்ஜுனிடம் சென்று இருக்கிறது. படத்தில் அர்ஜுனுக்கு நிகராக வடிவேலு கதாபாத்திரம் இருந்தாலும் இந்த படம் வெற்றி பெறும் என நம்பி அவர் நடித்தார் அவர் நினைத்தது போலவே படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் மருதமலை படத்தில் அர்ஜுன் தனது கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தார் அர்ஜுன், வடிவேல் காமினேஷன் சூப்பராக இருந்தது என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். அர்ஜுன் தற்பொழுது விஜய் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்..