சினிமா உலகை பொறுத்தவரை படங்களுக்கு பஞ்சமே இருக்காது சொல்லப்போனால் வருடத்திற்கு இந்தியாவில் மட்டுமே சுமார் 1000 படங்களுக்கு மேலாக வெளிவந்து அசத்துகின்றன அதிலும் குறிப்பாக தமிழில் மட்டும் வாரத்திற்கு மூன்று, நான்கு படங்கள் வெளியாகிய வண்ணமே இருக்கின்றன.
ஆனால் தற்போது நிலவும் கொரோனா தொற்றுக் காரணமாக பெரும்பாலான படங்கள் வெளிவராமல் இருக்கின்றன. இளம் நடிகர்களின் படங்கள் OTT தளங்களை நாடி எப்படியோ படத்தை ரிலீஸ் செய்து விடுகின்றனர் ஆனால் முக்கிய மற்றும் டாப் நடிகர்கள் படங்கள் திரையரங்கில் வெளியீட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி அதிக முனைப்பு காட்டுகின்றனர் ஆனால் அது நடக்காத வண்ணம் இருக்கின்றன.
வலிமை படம் திரையரங்கில் வெளியிட ஜனவரிமாதம் திட்டமிட்டது ஆனால் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டது ஆனால் படத்தை வெளியிட முடியாமல் போக தள்ளிக்கொண்டே போகின்றன. அதேபோல கே ஜி எஃப் போன்ற டாப் நடிகர்கள் படங்கள் தேதியை தள்ளி வைத்துக் கொண்டே போகின்றன.
இந்த நிலையில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் ஏப்ரல் 14 ஆம் தேதியை குறிவைத்து உள்ளது. இந்த நிலையில் தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை எதிர்த்து ஏப்ரல் 14ம் தேதி மட்டுமே பல்வேறு படங்கள் வெளியாக இருக்கின்றன மக்கள் அதிகம் எதிர்பார்த்த கேஜிஎப் இரண்டாம் பாகம் கூட அப்பொழுதுதான் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது ஏற்கனவே கேஜிஎப் முதல் பாகம் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் பரல் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
பீஸ்ட் திரைப்படத்தை எடுத்து கேஜிஎப் 2 மட்டும்தான் வெளியாகிறது என்று எதிர்பார்த்தால் அதே தேதியில் இந்தியில் அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள laal singh caddaha என்ற திரைப்படமும் வெளியாக இருக்கிறது இதனால் விஜய்யின் படத்தை எதிர்த்து இரண்டு திரைப்படங்கள் வெளியாகின்றன இதனால் பீஸ்ட் திரைப்படத்திற்கு வசூல் வேட்டை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது எது எப்படியோ மோதி பார்த்துவிடலாம் என ஒரு வகையில் ரெடியாக தான் இருக்கிறதாம் பீஸ்ட்.