சரத்குமார், நயன்தாரா நடித்த “ஐயா” படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்த இரண்டு டாப் நடிகர்கள்.! யாருன்னு தெரிஞ்சா ஷாக்காவீங்க..

nayanthara
nayanthara

ஆக்சன் திரைப்படங்களை எடுப்பதில் மிகவும் கைதேர்ந்தவர் இயக்குனர் ஹரி அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை வைத்து ஐயா என்னும் படத்தை எடுத்தார் இந்த படம் முழுக்க முழுக்க செண்டிமெண்ட் மற்றும் ஆக்சன் கலந்த திரைப்படமாக இருந்ததால் அப்பொழுது மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த திரைப்படமாக மாறியது.

இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்திலேயே எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் சரத்குமார் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்தார் இந்த படத்தில் அவருடன் இணைந்து நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நெப்போலியன், வடிவேலு, லட்சுமி, ரோகினி, நிழல்கள் ரவி,மதன் பாப்,  போண்டா மணி, காந்திமதி மற்றும் பல பிரபலங்கள் நடித்து அசதி இருந்தனர்.

ஐயா திரைப்படம் நயன்தாராவுக்கும் சரி சரத்குமாருக்கும் சரி அவர்களது கேரியரில் மிகப்பெரிய ஒரு வெற்றிப்படம். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது ஆனால் இயக்குனர் ஹரி முதலில் இந்த படத்தில் சரத்குமாரை நடிக்க வைக்கவே முயற்சி செய்யவில்லையாம்..

படத்தின் கதையை எழுதி விட்டு இயக்குனர் ஹரி உடனடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து இந்த படத்தின் கதையை கூறியுள்ளார். ரஜினி சில காரணங்களால் அதை தவிர்க்கவே உடனடியாக கேப்டன் விஜயகாந்திடம் இந்த கதையை கூறியுள்ளார்.

அவரும் தவிர்க்க வேறு வழியில்லாமல் நடிகர் சரத்குமார்க்கு இந்த கதையை சொல்லி உள்ளார் அது அவருக்கு ரொம்ப பிடித்து போகவே ஐயா படத்தில் துணிந்து நடித்தார் அவர் நினைத்தது போலவே படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததாம்.