கடந்த 40 வருடங்களுக்கு மேலாக சினிமா உலகில் ரஜினியும் கமலும் நடித்து வருகின்றனர் இப்பொழுது கூட இவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளனர். ரஜினி ஜெயிலர் படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார். அதுபோல கமல் இந்தியன் 2, சபாஷ் நாயுடு, தேவர்மகன் 2 போன்ற பாடங்களில் நடிக்க ரெடியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது ஒரு பக்கம் ஆகி கொண்டே இருந்தாலும் சினிமா ஆர்வம் மட்டும் குறையாமல் இருவரும் இருப்பதால் தொடர்ந்து நடித்து வருகின்றனர் மேலும் இப்போதைக்கு இருக்கும் காலகட்ட நடிகர்கள் கூட ரஜினி, கமலை முந்த முடியாமல் தடுமாறி வருகின்றனர் ஆனால் 90 கால கட்டங்களில் ரஜினி, கமலையே நடுநடுங்க வைத்த ஒரு சில நடிகர்கள் இருந்து வந்துள்ளனர்.
குறிப்பாக ரஜினிக்கு பெரும் பயத்தை காட்டிய இரண்டு நடிகர்கள் யார் யார் என்பது குறித்து தற்பொழுது பார்ப்போம். அந்த இரண்டு பிரபலங்கள் வேறு யாரும் அல்ல ராமராஜன் மற்றும் ராஜ்கிரன் தான் இவர்கள் 90 காலகட்டங்களில் நடித்த பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய ஒரு வெற்றி படங்களாக மாறியது. அதுவும் அந்த படங்கள் தொடர்ந்து வெற்றி விழா கண்டதால் ரஜினி ராமராஜன், ராஜ்கிரணை பார்த்து பல நடிகர்கள் பயந்து உள்ளனர்.
ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் பல வாரங்கள் திரையரங்குகளில் ஹவுஸ்புள்ளாக ஓடி உள்ளது மேலும் அவர் பெரும்பாலும் கிராமத்து கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததால் கிராம பக்கம் இவரது படங்கள் எப்படியோ நல்ல வசூலை அள்ளி வெற்றியை பெற்று விடும் அதுபோல ராஜ்கிரனும் தொடர்ந்து அவரது ஸ்டைலில் வில்லன்களை அடிப்பது, எலும்பை அடித்து நொறுக்குவது போன்ற ஸ்டைல் ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால்..
அவரது படமும் வெற்றியை தொடர்ந்து நிலை நாட்டியது ஒரு கட்டத்தில் ரஜினியே ராஜ்கிரன் எல்லாம் போன் பண்ணி என் படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார்கள் நீங்கள் உங்கள் படத்தின் ரிலீஸ் செய்தியை தள்ளி வைக்க முடியுமா என்ற அளவிற்கு எல்லாம் கேட்டு உள்ளாராம் அப்படி என்றால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் ராஜ்கிரண் மற்றும் ராமராஜனின் சினிமா பயணம் எப்படி இருந்திருக்கும் என்று… ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் தனது பாதையை மாற்றிக் கொண்டனர் ராமராஜன் அரசியல் பிரவேசம் கண்டார் ராஜ்கிரண் சினிமா உலகில் குணச்சிதர கதாபாத்திரங்களில் நடித்தார்.