தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களுக்கு இசை அமைத்து தனது தனித்துவமான திறமையை வெளிக்காட்டி இன்றுவரையிலும் இசையமைத்து வருகிறார் இசைஞானி இளையராஜா.
இவரைத் தொடர்ந்து அவரது மகன் பதினாறு வயதிலேயே தனது இசையமைப்பாளர் பயணத்தைத் தொடர்ந்தார் யுவன் சங்கர் ராஜா.
முதல் படமான ‘அரவிந்தன்’ என்ற படத்தில் இவருக்கு சொல்லும்படி வரவேற்பு கிடைக்காவிட்டாலும் அதன்பின் இவருக்கு அமோக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
செவன் ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன் ஆகிய படங்களில் இவரது இசை பெரிதும் மக்களை ஈர்த்தது அன்றிலிருந்து இன்றுவரை இவரது பாடல்கள் ஒவ்வொன்றும் கலக்கிக் கொண்டு வருவதோடு தீம் மியூசிக்கிளும் செம்ம மாஸ் செய்கிறார்.
பெரும்பாலான முன்னணி நடிகர்களின் விருப்பமான இசையமைப்பாளராகவும் யுவன்சங்கர்ராஜா இருந்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், விஜய், சூர்யா,விக்ரம், கார்த்தி போன்ற படங்களுக்கு இசையமைத்து இருந்தாலும் இவர்கள் எல்லாம் தாண்டி உச்ச நட்சத்திரமாக கமல் ரஜினி ஆகியோர் படங்களுக்கு இதுவரை இசையமைத்தது கிடையாது.
இச்செய்தி தற்போது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. மேலும் இனியும் இவர்களுக்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆவர் என்றால் அதுவும் தற்போது சற்று கேள்விக்குறியாகத்தான் அமைகிறது.
ஏனென்றால் ரஜினி சமீபகாலமாக ஏ ஆர் ரகுமான், அனிருத் ஆகியோரை தேர்வு செய்து நடித்து வருகிறார் அவர்கள் இல்லாவிட்டால் இமானை தேர்வு செய்து வருகிறார்.
இவரைப்போல தான் கமலும் ஓரிரு இசையமைப்பாளர்களை தேர்வு செய்து வைக்கிறார். பெருமாளும் கமல் சமீபகாலமாக ஜிப்ரானை இசையமைப்பாளராக பயன்படுத்துகிறார் அவர் இல்லாவிட்டால் ஏ ஆர் ரகுமான் அல்லது அனிருத் இவரது படங்களுக்கு இசையமைக்கின்றனர்.