நடிகை சௌந்தர்யா இறப்பதற்கு முன்பு கேட்ட இரண்டு விஷயங்கள்.! என்னன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போடும்..

soundarya
soundarya

தென்னிந்திய திரைப்பட நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா இவர் பொன்னுமணி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் அது மட்டும் இல்லாமல் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து அருணாச்சலம், படையப்பா திரைப்படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்றார்.

அதனைத் தொடர்ந்து காதலா காதலா, பொன்னுமணி, தவசி, சொக்கத்தங்கம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பின்பு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள விமானத்தில் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

இவரின் இழப்பு சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது தொடர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வந்த இவரின் இழப்பை யாரும் எதிர்பார்க்கவே கிடையாது.

இந்த நிலையில் நடிகை சௌந்தர்யா பற்றி தற்பொழுது ஒரு தகவலை சௌந்தர்யாவின் அண்ணி பகிர்ந்துள்ளார் அவர் கூறியதாவது சௌந்தர்யா இறப்பதற்கு முன்பு கடைசியாக அவர் காட்டன் புடவையையும் குங்குமமும் கேட்டார் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்ற சௌந்தர்யா திடீரென மறைந்ததால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தார்கள்.