ராஜமௌலி இயக்கிய “RRR” திரைப்படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இந்த இரண்டு தமிழ் ஹீரோக்கள் தானாம்.? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த செய்தி

RRR
RRR

இந்திய அளவில் கவனிக்க படும் இயக்குனர்களில் ஒருவர் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி. இவர் பாகுபலி, பாகுபலி 2 படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட் வெற்றியை தொடர்ந்து ராம்சரண், ஜுனியர் என்டிஆர் வைத்து எடுத்த திரைப்படம் தான்  RRR. இந்த படம் 550 கோடி பட்ஜெட்டில் உருவானது.

இந்த படம் முழுக்க முழுக்க ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடும் ஒரு படமாக இருந்தது.  அதே சமயம் இந்த படத்தில் ஆக்சன், சென்டிமென்ட்  என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் வேட்டை நடத்தியது கடைசி வரை மட்டுமே இந்த திரைப்படம் சுமார் 1200 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.

இந்த படம் வெளிவந்து வசூலில் ருத்ரதாண்டவம் ஆடியதோடு மட்டுமல்லாமல் பல விருதுகளையும் அள்ளி குவித்தது அண்மையில் கூட ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடலுக்கு இசை அமைத்ததற்கு கீரவாணிக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியை தற்போது பலரும் கொண்டாடி வருகின்றனர் இந்த நிலையில் RRR இந்த படத்தை வெற்றிக்கு மிக முக்கிய காரணம் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் என கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்த திரைப்படத்தில் முதன் முதலில் நடித்திருக்க வேண்டியது சூர்யா மற்றும் கார்த்தி தான் என சொல்லப்படுகிறது. படக்குழவினர் கலந்துரையாடும் போது இவருடைய பெயர் தான் வந்துள்ளதாம்.

அடுத்ததாக பேசும்பொழுது நடிகர் அஜித் மற்றும் அல்லு அர்ஜுனன் நடிக்க வைக்கலாம் என கலந்துரையாடி உள்ளனர் கடைசியாக படக்குழு ராம்சரண் ஜூனியர் என்டிஆர் என சொல்ல அனைவருக்கும் அது பிடித்து போக படத்தில் இரண்டு பேரும் நடித்து அசத்தினார். படம் வெளிவந்து எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.