தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துவரும் இரண்டு நடிகர்களின் திரைப்படம் ஒன்று தெலுங்கு சினிமாவையே ஆட்டி படைத்தது என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடனும் உலக நாயகன் என்ற பட்டத்துடனும் உலா வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவரும் பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி அவர்களின் திரைப்படம் சமீபகாலங்களாக பெரும் வரவேற்ப்பு பெறாத நிலையில் தற்போது நெல்சன் உடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் கமல் அவர்கள் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது.
இப்படி தங்களுடைய படத்தில் பிசியாக நடித்து வரும் ரஜினி கமல் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து உள்ளனர். அவர்கள் இணைந்து நடித்த ஒரு திரைப்படம் தெலுங்கு சினிமாவையே ஆட்டி படைத்தது.
அந்த வகையில் இவர்கள் இருவரும் நடித்த ஒரு படம் தெலுங்கு சினிமாவில் பல கோடி வசூலித்து ஆட்சி செய்தது. அதாவது 1977 ஆம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் கமல் மற்றும் ரஜினி நடிப்பில் உருவான ஆடு புலி திரைப்படம் தெலுங்கு சினிமாவையே ஆட்சி செய்தது. இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகராக கமல் அவர்கள் நடித்திருப்பார் மேலும் இரண்டாவது நாயகனாகவும் வில்லனாகவும் ரஜினி அவர்கள் நடித்திருப்பார்.
இதனால் படத்தின் டைட்டில் முதலில் கமல் பெயரும், இரண்டாவதாக ரஜினி பெயரும் வரும். இருவரும் இந்த திரைப்படத்தில் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்கள். பொதுவாக தற்போது உள்ள நடிகர்களின் படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாவது சகஜம்தான் ஆனால் இந்த வழக்கம் எம்ஜிஆர் காலகட்டத்திலேயே இருந்தது.
அந்த வகையில் கமல் மற்றும் ரஜினி நடிப்பில் வெளியான ஆடுபுலி படமும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவானது. இந்த படம் இரண்டிலுமே ஒரே தேதியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழை விட தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அதாவது தெலுங்கில் வெளியான போது ஒவ்வொரு தியேட்டர் உரிமையாளர்களும் தங்களுடைய தியேட்டரில் எந்த அளவிற்கு வசூலித்தது என்பதை விளம்பரம் தரும் அளவிற்கு ஆடுபுலி படம் தெலுங்கில் மெகா ஹிட் அடித்தது. தற்போது உள்ள விஜய் அஜித் படங்கலே தெலுங்கில் பெரிதாக ஓடாத நிலையில் தலைவர்கள் இருவரும் அப்போவே சாதனை படைத்து விட்டார்கள் என்று ரஜினி, கமல் ரசிகர்கள் பெருமையுடன் கூறி வருகிறார்கள்.