நடிகர் அஜித் சமீபகாலமாக ஒரு இயக்குனருடன் படம் எடுத்து வந்தால் அடுத்த அடுத்த ஒரு சில படங்களையும் அதே இயக்குனருடன் தொடர்ந்து கைகோர்த்து வருகிறார் அந்த வகையில் முதன்முறையாக இயக்குனர் ஹெச் வினோத் உடன் நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் நடித்து வந்தார்.
பின்பு அதே இயக்குனருடன் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வந்த நிலையில் தற்போது அஜித் நடித்து வரும் AK 61 திரைப்படத்திலும் மூன்றாவது முறையாக இயக்குனர் ஹெச் வினோத்துடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று மூன்றே மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் அஜித்தின் 61வது படத்தை வருகிற தீபாவளி அன்று வெளியிட உள்ளதாக போனிகபூர் தெரிவித்துள்ளார். நாளை அஜித்தின் பிறந்த நாளை எடுத்து AK 61 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஹீரோயின் குறித்த தகவல் போன்ற பல தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளியன்று வெளியாக உள்ள அஜித்தின் 61 வது படத்தை தொடர்ந்து கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் அயாலன் போன்ற படங்கள் வெளியாகும் என தெரியவருகிறது. இந்த இரு படங்களும் தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் புரோடக்சன் வேலை நடைபெற்று வருகிறது.
மேலும் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தின் ரிலீஸ் நீண்ட நாட்களாக தள்ளிப் போய்க் கொண்டே இருந்த நிலையில் நிதி நெருக்கடி காரணமாக சிஜி வேலைகள் முடங்கி உள்ளதால் தான் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இதனிடையே தீபாவளியன்று அஜீத் படத்துடன் சர்தார் மற்றும் அயாலன் மோதுவது உறுதியாகி உள்ளது