திரை உலகில் இருக்கும் பெரும்பாலான இயக்குனர்கள் எப்போதும் அதிக காசு பார்க்க தொடர்ந்து கமர்சியல் ஹிட் படங்களை எடுப்பது வழக்கம் ஆனால் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே தான் சினிமா உலகில் தான் தெரியவேண்டும் என்பதற்காக வித்தியசமான படங்களை பொறுமையாக கையாண்டு ஒரு படத்தை எடுத்தாலும் அந்த படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் ஆழமாக சென்று இருக்க வேண்டும்.
என்பதால் அந்த படத்தை ஒவ்வொன்றாக செதுக்கி அதை வெற்றி படமாக எடுத்து செல்வார்கள் அந்த படமும் திரையரங்கில் வெளிவந்து அதிரி புதிரி ஹிட் அடிப்பதோடு தமிழ் சினிமாவில் பெஸ்ட் படமாக அமையும். அப்படிப்பட்ட இயகுனராக தமிழ் சினிமாவில் இருந்து வருவர் அமீர்.
இவர் தற்போது நடிகராகவும், இயக்குனராகவும் பணிபுரிந்து வருகிறார். தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்ற இவர் திடீரென ஒரு கட்டத்தில் திரைப் படங்களை இயக்காமல் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். அது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது காரணம் இவர் தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களை எடுத்து இருந்தாலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் செம்ம ஹிட் அடித்தது மக்கள் மத்தியில் பேசும் படமாக அமைந்தது.
அந்த வகையில் இவர் இயக்கத்தில் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதிபகவான் போன்ற படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் அதில் ஆதிபகவன் மட்டுமே சற்று சறுக்கல் சந்தித்தது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இப்படி சினிமாவில் இயக்குனராக வலம் வந்த போது இவர் விஜய்யை சந்தித்து இரண்டு கதைகளை கூறினார் கதைகள் எல்லாமே சூப்பர் அதில் ஒரு கதையை எடுக்குமாறு விஜய் சொன்னார் அதற்கு அமீர் பொறுமையாக எடுக்கலாமா அல்லது உடனடியாக எடுக்கலாம் என விஜய்யிடம் கேட்க உங்களுக்கு எப்படியோ எனக்கு ஓகே என சொல்ல.. இயக்குனர் அமீர் அவர்களோ அதை பொறுமையாக கையாண்டார்.
அப்போதைய காலகட்டத்தில் தொடர்ந்து விஜய்க்கு பல்வேறு திரைப்படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்ததால் அந்த படம் எடுக்க முடியாமல் போனது. இயக்குனர் ஆமிர் தற்பொழுதும் விஜய்க்காக ஒரு சிறப்பான கதையை வைத்துள்ளாராம் தற்போது விஜய் கதை கேட்க தயாராக இருந்தால் கதையை சொல்லி ஓகே வாங்கி உடனே அந்த படத்தை எடுக்க ரெடியாக இருக்கிறேன் இந்த தடவை மிஸ் செய்ய மாட்டேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.