சினிமா உலகில் பயணிக்கும் பல நடிகர்கள் நடிகைகள் ஒரு சமயத்தில் காதல் வயப்பட்டு பிண் திருமணம் செய்து கொள்கின்றனர் அந்த வகையில் அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா என பல பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்பொழுது வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக அஜித் ஷாலினி ஜோடி ரசிகர்களுக்கு எப்பொழுதுமே பிடித்த ஜோடி அஜித் ஒரு பக்கம் படங்களில் நடிக்க மறு பக்கம் ஷாலினி தனது குடும்பத்தை சிறப்பான முறையில் பார்த்து வருகிறார். ஆனால் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே வேறு ஒரு நடிகைக்கு ரூட் விட்டவர் அஜித் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்..
நடிகர் அஜித்குமார் முதலில் ஹீரா என்கின்ற பெண்ணை தான் காதலித்து வந்தார். இரவு முழுவதும் தூங்காமல் அவருக்காக காதல் கடிதங்கள் எழுதுவது என அவரை துரத்தி துரத்தி வந்தார் அஜித். ஆனால் கடைசியில் ஹீரா அஜித்திற்கு ரெட் சிக்னல் காட்ட இவர்களது காதல் முடிவுக்கு வந்தது.
அஜித்தும், நடிகை ஹீராவும் இணைந்து இரு படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தை போலவே நடிகர் சரத்குமாரும் ஹீராவை காதலித்து வந்தார் இருவரும் சில வருடங்கள் காதலித்து வந்த நிலையில் ஒரு தடவை நடிகர் சரத்குமார் பெண் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால் அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை அதன் பிறகு இந்த ஜோடியும் பிரிந்து விட்டனர். நடிகை ஹீரா நடிகர் அஜித்தை உதறி தள்ளியது நல்லது தான் இல்லை என்றால் நடிகை ஷாலினி போல ஒரு நல்ல பெண் அஜித்திற்கு கிடைத்திருக்க மாட்டார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.