உலக நாயகன் கமலுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை.! தலைவன் சும்மா விடமாட்டாரே..

kamal-hassan
kamal-hassan

திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரின்  நடிப்பு திறமையை பார்த்து பலர் வியந்து உள்ளார்கள் அந்த வகையில் தனது வாழ்நாளை திரையிலேயே அர்ப்பணித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் என பல மொழிகளில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் அதனை இயக்குவது, தயாரிப்பது என பலவற்றைச் செய்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் ஒரு பக்கம் அரசியல் இன்னொரு பக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி என மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என 2 தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது கொரோனா தாக்கம் அதிகமாக  இருப்பதால்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கமலஹாசனுடன்,2 முன்னணி நடிகைகள் நடிக்க மறுத்துள்ளார் அதனை பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார். வில்லனாகவும், காமெடியனாகவும் நடித்து கலக்கி வந்தவர்தான் பயில்வான் ரங்கநாதன் ஒரு கட்டத்திற்கு பிறகு பெரிதாக திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக பத்திரிக்கையாளராக  பணியாற்ற ஆரம்பித்தார்.

பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து பல நடிகர் நடிகைகளின் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை வைத்து வருவதால் பலர் அவர் மீது கோபமாக இருந்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை. அந்த வகையில் ஒரு படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை நதியாவை  தேர்வு செய்து இருந்தார்களாம் அப்பொழுது நதியாவிடம் கேட்டதற்கு  எத்தனை லட்சம் கொடுத்தாலும்  கமலஹாசனுடன் நடிக்க மாட்டேன் என மறுத்தாராம்.

சினிமா துறையில் நான் பார்த்தவரை நதியா மட்டும்தான் திரைப்படத்திற்காக நீச்சல் உடை அணியாமல் இருந்துள்ளார் என்றும் கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். அதோடு நதியா எப்பொழுதும் மிகவும் ஆபாசம் மற்றும் ரொமான்ஸ் போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டாராம். ஒரு கதை கூறினால் அந்த கதை மட்டும்தான் அதில் எக்ஸ்ட்ரா பிட்டிங் ஏதாவது இருந்தால் நடிக்க முடியாது என மறுத்து விடுவாராம்.

nathiya
nathiya

நடிகை நதியாவை தொடர்ந்து நடிகை சுப்புலக்ஷ்மிக்கும் கமலஹாசனுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம் ஆனால் சுபலட்சுமி கமலஹாசனுடன் நடிக்க மறுத்ததோடு மட்டுமல்லாமல் நான் குடும்பப்பாங்கான கதைகள் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறியுள்ளாராம்.