ஒரே படத்தில் அறிமுகமாகும் ஜீ தமிழின் இரண்டு கதாநாயகிகள்.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

zee-tamil-actress
zee-tamil-actress

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் எந்த அளவிற்கு நல்ல கதைசமுள்ள புதிய சீரியல்களை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறதோ அதேபோல் கதாநாயகிகளையும் புதிதாக களம் இறக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் கதாநாயகிகளும் அறிமுகமாகும் அனைவரும் தங்களுடைய முதல் சீரியலிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விடுகிறார்கள்.

இவர்களை தினமும் பார்ப்பதனலோ என்னவோ தங்களுடைய குடும்பத்தில் ஒருவராக நினைத்து விடுகிறார்கள் ரசிகர்கள். அது மட்டுமல்லாமல் சீரியல் நடிகைகள் சோசியல் மீடியாவில் இருந்து வருவதால் நாள்தோறும் அவர்களிடம் கலந்துரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் சில நிகழ்ச்சியின் மூலம் கலந்துக் கொண்ட ரசிகர்கள் கதாநாயகிகளுக்கு தங்களுக்கு பிடித்த பரிசு பொருட்களையும் வழங்கி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் ஜீ தமிழ் தொடரில் மிகவும் பிரபல சின்னத்திரை நடிகைகளான ஷபானா மற்றும் ரேஷ்மா ஜீ தமிழில் நீண்ட காலங்களாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழில் செம்பருத்தி சீரியல் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் தான் ஷபானா. இவரைத் தொடர்ந்து ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று அதன் பிறகு பூவே பூச்சூடவா என்ற சீரியலில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று சக்தி என்ற பெயரின் மூலம் பிரபலமடைந்தவர் தான் ரேஷ்மா

இந்நிலையில் தற்பொழுது ஷபானா மற்றும் ரேஷ்மாவுக்கு அடுத்தடுத்த ஏராளமான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஷபானாவுக்கு அவருடைய காதலன் ஆரியன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது அடுத்த நாளே ரேஷ்மாவுக்கு தன்னுடைய காதலன் மதனுக்கும் திருமணம் நடைபெற்றது.
இவ்வாறு இது சோசியல் மீடியாவில் பெரிதளவு பேசப்பட்டது இப்படிப்பட்ட நிலையில் ஒரே திரைப்படத்தில் ஷபானா, ரேஷ்மா இருவரும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பகையை காத்திரு என்ற திரைப்படத்தில் இவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் மேலும் இது குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இவ்வாறு நெருங்கி தோழிகளான இருவரும் ஒரே நேரத்தில் ஒரே படத்தில் வெள்ளித்திரைக்கு அறிமுகமாவது ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்படுகிறது.