Ajith : சினிமா உலகில் நல்ல ஹீரோ என்று பெயர் எடுப்பது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது அப்படியே எடுத்தாலும் அதை நீங்கள் சினிமாவில் இருக்கும் வரை தக்க வைப்பது பெரிய விஷயம் ஆனால் அதை செய்து கொண்டிருப்பவர்கள் வெகு சிலரே.. அதில் ஒருவர் அஜித். இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார்.
இவர் உடன் நடித்த நடிகர், நடிகைகளிடம் நீங்கள் எப்பொழுது போய் கேட்டாலும் அஜித் ரொம்ப நல்லவர், பக்கா ஜென்டில்மேன் என்று தான் கூறுவார்கள். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் அஜித் பற்றி பேசி உள்ளார் அவர் கூறுவது என்னவென்றால்..
அஜித்தை பற்றி நடிகைகள் அப்படி சொல்கிறார்கள் என்றார் அந்த அளவிற்கு நடிகைகளிடம் அஜித் பழகும் முறை தான் காரணம் எனக் கூறினார். நடிகர் மம்முட்டியும் படப்பிடிப்பில் நடிகைகளிடம் மிக கண்ணியமாக நடப்பாராம் அதாவது படத்தில் ஏதாவது ஒரு டூயட் பாடல் இருந்தால் அது சம்பந்தமான காட்சிகளில் நடித்துவிட்டு..
அதன் பிறகு அந்த நடிகையின் பக்கமே திரும்ப மாட்டாராம் அவரைப் போலவே தான் நடிகர் அஜித்தும் தமிழ் சினிமாவில் ஒரு கண்ணியமான நடிகராக அஜித்தை அனைவரும் சொல்வார்கள் என்று சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார் இப்படி அஜித்துக்கு என்று சினிமாவில் ஒரு நல்ல பெயர் இருந்து கொண்டிருக்கிறது. இதனால் தான் நடிகைகள் தொடங்கி ரசிகர்கள் வரை அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.
அஜித் அடுத்து மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க உள்ளார் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இருவரும் இணைந்து ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இது இந்த ஜோடிக்கு ஐந்தாவது படமாகும்.