2022 ல் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பல கோடி ரூபாய் லாபம் பார்த்த இரண்டு திரைப்படங்கள்…

movie
movie

இயக்குனர் அனு ராகவப்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருநாள் தாகூர், ராஷ்மிகா மந்தானா, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது சீதா ராமம். இந்த திரைப்படம் 1964 ஆம் ஆண்டு காஷ்மீர் எல்லையில் பணியாற்றும் அனாதையான ராணுவ அதிகாரியான ராம் என்பவரும் சீதா என்பவரும் காதலித்து வருகிறார்கள் இவர்களுடைய காதல் கடிதங்களை பேசுகிறார் ராம். அதன் பிறகு சீதாவை கண்டுபிடித்து தனது காதலை முன் வைக்கும் பணியில் ஈடுபடுகிறார் ராம் இதுதான் இந்த படத்தின் கதையின் தொடக்கம் அதன் பிறகு என்ன நடக்கிறது அதுதான் இந்த படத்தின் கதை.

இப்படி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் பட்டையை கிளப்பியது. இந்த படம் 30 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியாகி 91.4 கோடி வரை வசூல் செய்துள்ளது.

மேலும் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு சமீபத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார்.

பொதுவாக புதுமுக நடிகர்கள் என்றாலே அந்த படம் சரியாக ஓடாது ஆனால் பிரதீப் ரங்கநாதனின் படம் பட்டி தோட்டி எங்கும் பிரபலமானது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் அமைந்துள்ள செல்போனை மாற்றிக் கொள்ளும் காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்தப் படத்தில் நடக்கும் ஒரு சில காட்சிகள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்தது போல் பல விமர்சகற்கள் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான சீதாராம் திரைப்படம் கம்மியான பொருட் செலவில் எடுக்கப்பட்டு அதிகம் லாபம் பார்த்தது சீதா ராமம்.  அதே போல லவ் டுடே திரைப்படம் 72 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. ஆம் சீதாராம் 30 கோடி செலவில் எடுக்கப்பட்டது ஆனால் லவ் டுடே 5 கோடி செலவில் மட்டுமே எடுக்கப்பட்டது.

சீதா ராமம் திரைப்படம் வெளியாகி 91.4 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. லவ் டுடே திரைப்படம் 72 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது இந்த இரண்டு படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.