தமிழ் திரை உலகில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் சமீபத்தில் மாபெரும் ஹிட் கொடுத்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல் நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படத்தின் கதைக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுப்பதன் காரணமாக அவருடைய திரைப்படங்கள் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்த கர்ணன் திரைப்படம் கூட மாபெரும் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதை அம்சம் உடையதாக இருந்து வருகிறது இது தான் அவருடைய வெற்றிக்கு காரணம் எனவும் பலர் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் அவர்கள் தீபாவளி பண்டிகையை மிக பிரம்மாண்டமாக பல்வேறு நட்சத்திரங்களுடன் தன்னுடைய வீட்டில் கொண்டாடியுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இவ்வாறு அந்த தீபாவளி பண்டிகையின்போது தனுஷ் வீட்டில் வைபவ், கிருஷ்ணா போன்ற பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள் இவ்வாறு அவர்கள் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.