தளபதி விஜய் அண்மைகாலமாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து மிகப்பெரிய அளவில் தூக்கி விடுகிறார். அந்தவகையில் தளபதி விஜய் இளம் இயக்குனர் அட்லீக்கு வாய்ப்பு கொடுத்தார் முதலில் தெறி படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து மீண்டும் அட்லீ உடன் இணைந்து பிகில், மெர்சல் ஆகிய படங்களிலும் தளபதி இணைந்து நடித்தார்.
அட்லீயை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் மாஸ்டர் படத்தில் நடித்தார் அந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது தற்போது தளபதி விஜய் தனது 66வது திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ரெடியாக இருக்கிறார்.
இந்த நிலையில் தன் உடன் பணியாற்றிய இயக்குனர் லோகேஷ் கனகராஜும் அடுத்தடுத்த லெவலுக்கு உயர்ந்து போய்க் கொண்டிருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் தற்போது உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை எடுத்திருந்தார்.
படம் இன்று உலக அளவில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளே நல்லதொரு வசூலை அள்ளி ஒரு புதிய சாதனை படைக்கும் என தெரியவருகிறது. அதேபோல இயக்குனர் அட்லீ பிகில் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் படத்தை இயக்கிவருகிறார்.
இந்த படம் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவரும் என கூறப்படுகிறது தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு உள்ளது படக்குழு. விஜய் உடன் பணிபுரிந்த இந்த இரண்டு இளம் இயக்குனர்களும் தற்போது மிகப்பெரிய ஒரு உச்சத்தை எட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.@actorvijay na will be the happiest person today ❤️ pic.twitter.com/bZEyJ8hu3h
— Aloneboy (@ItzVarun_____) June 3, 2022