படத்தில் நடிப்பதற்கு முன்பு ஹீரோவுடன் இரண்டு நாள்… முகம் சுளிக்கும் வகையில் ரெஜினாவிடம் கேள்வி கேட்ட அபிஷேக். கழுவி கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

regina
regina

நடிகை ரெஜினா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் இவர் கடந்த 2005ஆம் ஆண்டு பிரசன்னா லைலா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகிய கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தன்னுடைய 15 வயதில் சினிமாவின் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து அழகிய அசுரா, பஞ்சமித்ரம் என சில தமிழ் திரைப்படங்களில் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் 2013ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தின் மூலம்  ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார். இவருக்கு இந்த திரைப்படம் நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து சரவணன் இருக்க பயமேன் ராஜதந்திரம் என பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து வந்தார். தற்போது இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி என்ற திரைப்படத்திலும் சிம்புதேவன் இயக்கிவரும் கசடதபற என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இதுவரை முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் திணறி வருகிறார். இதெல்லாம் ஒருபுறமிருக்க தெலுங்கு சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம்தான் நெஞ்சம் மறப்பதில்லை இந்த திரைப்படம் ரசிகர்களின் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

அதேபோல் இவரை நடிப்பும் பெரிதாக பாராட்டப்பட்டது. இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் அபிஷேக் ரெஜினா விடம் முகம் சுளிக்கும் வகையில் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார் இது ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது விமர்சகர் அபிஷேக் நயன்தாரா மற்றும் அதர்வா நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நடித்திருந்தார் இவர் அடிக்கடி சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து கேலிக்கு உள்ளாவது வழக்கம்.

அப்படிதான் ரெஜினாவை பேட்டி எடுத்து மொக்கை வாங்கியுள்ளார் அவர் ரெஜினா விடம் படத்தில் காதல் கதை என்றால் திடீரென நடிப்பது கஷ்டமா என கேள்வி எழுப்பினார் அதுமட்டுமில்லாமல் ஹீரோவுடன் திடீரென புரிதலை உண்டாக்கி நடிப்பது கஷ்டமா கஷ்டம் இல்லையா என கேள்வி எழுப்பினார்.  மேலும் காதல் கதையாக இருந்தால் இரண்டு நாட்களுக்கு முன்பே ஹீரோவுடன் பேசுவது அவருடன் நேரத்தை செலவிடுவது போன்றவை சினிமாவில் நடக்கிறதா.  அதேபோல் உங்களுக்கும் நடக்குமா என கேட்டிருந்தார் அதற்கு ரெஜினா இல்லை என பதில் அளித்தார்.

இருந்தாலும் அபிஷேக் இதுபோல் கேள்வியை ஒரு நடிகையிடம் கேட்டது கடவுள் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அபிஷேக் ஒரு நடிகருடன் யார் என்று தெரியாமல் அவருடன் நீங்கள் மிகவும் சவுகரியமாக இருப்பது போல் படத்தில் காண்பிப்பதற்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா நீங்கள் என்ன செய்வீர்கள் என்று அபிஷேக் கேள்வி எழுப்பினார்.  அப்பொழுது ரெஜினா நாங்கள் நடிப்பதற்கு முன்பு போட்டோ ஷூட் நடத்துவோம் அப்பொழுது ஹீரோ யார் என்று தெரிந்து கொள்வோம். அதன்பிறகு ஒருவருக்கொருவர் நண்பர்களாக மாறி விடுவோம் என கூறினார்.

இருந்தாலும் அபிஷேக் ஒரு நடிகையிடம் முகம் சுளிக்கும் வகையில் கேள்வி கேட்டது ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது. இந்த பேட்டியை பார்த்த ரசிகர் ஒருவர் நடிகை என்றால் என்ன வேண்டும் என்றாலும் கேட்பானா ரெஜினா உச்சரிக்க சிரமமாக இருக்கா என வெளுத்து வாங்கியிருக்கிறார்.