பிக்பாஸ் ஜோடி டைட்டிலை தட்டி சென்ற இரண்டு ஜோடிகள்.! உற்சாகத்தில் ரசிகர்கள்..

bb jodigal
bb jodigal

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் மிகவும் சுவாரசியமாக இருந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் விஜய் டிவியின் மூலம் அறிமுகமாகி பிரபலமடைந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று வரும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இதன் காரணத்தினால் விஜய் டிவியில் கலந்து கொண்டால் சினிமாவில் பிரபலமடைந்து விடலாம் என்பதற்காக பல பிரபலங்கள் விஜய் டிவியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது 5 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து புதிதாக பிக்பாஸ் ஜோடிகள் என்ற புத்தம் புதிய என்டர்டைன்மெண்ட் ஷோ ஒளிபரப்பாகி வருகிறது.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களை வைத்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மிகவும் விதவிதமான சுற்றுகள் காமெடி கலாட்டாக்கள் என தொடர்ந்து நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் டைட்டில் வின்னராக அனிதா சம்பத் ஷாரிக் ஜோடி பெற்றார்கள். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் கிராண்ட்பினாலே விற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் இதன் மூலம் டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிய வந்துள்ளது அதாவது பிக் பாஸ் சீசன் ஐந்தில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் தான் அமீர் மற்றும் பாவணி. இந்த ஜோடிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்கள். மேலும் இவர்களுக்கு தான் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற வேண்டும் என ரசிகர்கள் மிகவும் ஆசைப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் அமீர் மற்றும் பாவணி ரசிகர்களின் ஆர்வத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே தங்களுடைய சிறந்த நடனத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவர்களைத் தொடர்ந்து சுஜா-சிவகுமார் இவர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ள நிலையில் இவர்கள் இரண்டு ஜோடிகளும் கிராண்ட்பினாலே நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக ஆடி இருந்தனர்.

இதன் காரணமாக இந்த இரண்டு ஜோடிகளையுமே டைட்டில் வின்னராக இந்நிகழ்ச்சியின் நடுவர்களான நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடன இயக்குனர் சதீஷ் தேர்ந்தெடுத்து உள்ளார்கள். இதனை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியின் பெஸ்ட் பர்பாமன்ஸ் அவார்டு அமீர்க்கு கொடுக்கப்பட்டுள்ளது டிவிஎஸ் பைக்கும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு பிக்பாஸ் சீசன் ஐந்தில் அமீர் மற்றும் பாவணி இந்நிகழ்ச்சியின் மூலம் விட்டதை பிடித்துள்ளார்கள் என கூறப்பட்டு வருகிறது.