ஜனனிக்கு மாறி மாறி ப்ரொபோஸ் செய்த இரண்டு போட்டியாளர்கள்.! இங்க என்ன நடக்குது.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான ரியாலிடி ஷோவான பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்த அனைத்து போட்டியாளர்களையும் ஜனனி கவர்ந்து வரும் நிலையில் தற்பொழுது ஜனனிக்கு இரண்டு சக போட்டியாளர்கள் மாறி மாறி ப்ரபோஸ் செய்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது நேற்றைய நிகழ்ச்சியில் ஜனனி, மகேஸ்வரி, ஆயிஷா, ராம், மணிகண்டன், அசல் கோளாறு உள்ளிட்டவர்கள் இணைந்து பொழுதுபோக்கிற்காக ஒரு ஆடிஷன் போன்று நடத்தலாம் என முடிவு செய்து இருக்கிறார்கள் அப்பொழுது ஒரு பெண்ணிடம் காதல் ப்ரபோஸ் செய்வது எப்படி என்பது குறித்து நான் அந்த ஆடிஷன் நடக்கும் எனவும் இதனை அனைவரும் முயற்சிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள்.

எனவே முதல் கட்டமாக மணிகண்டன் ஜனனியிடம் ப்ரொபோஸ் செய்கிறார் அவர் ப்ரொபோஸ் செய்த நடிப்பை பார்த்து ஜனனி அதிர்ச்சி அடைகிறார். மணிகண்டனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஜனணியிடம் அசல் கோளாறு தன்னுடைய ஸ்டைலில் ஒரு ராப் பாட்டை பாடி என்னை உனக்கு பிடிக்குதா பிடிக்கவில்லையா.? என்று சொல்லுங்கள் பிடிக்கவில்லை என்றால் இனிமேல் நான் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன் என்றும் அசத்தலாக நடித்துக் காண்பிக்கிறார்.

மேலும் இவர்கள் இருவரையும் தொடர்ந்து ஆயிஷாவுக்கு ராம் ப்ரொபோஸ் செய்கிறார் இதுபோன்ற மிகவும் ஜாலியாக இவர்கள் விளையாடக் கொண்டிருக்கிறார்கள் மேலும் இவர்கள் பொழுதுபோக்கிற்காக இவ்வாறு காமெடி காட்சிகளை நடத்தியுள்ளார்கள் இது ரசிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

மேலும் இது குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ஏராளமான ரசிகர்கள் இது நடிப்பிற்காக ப்ரபோஸ் செய்திருந்தாலும் இந்த போட்டியாளர்கள் உண்மையிலேயே ஜனனிக்கு இந்த சீசன் முடிவதற்குள் ப்ரப்போஸ் செய்வார்கள் என கூறி வருகிறார்கள் இது குறித்து பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.