இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

bigg boss 006
bigg boss 006

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியை மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்பொழுது 6வது சீசனும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி இதுவரையிலும் எட்டு போட்டியாளர்கள் வெளியேறி 13 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் இந்நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு இருக்கும் நிலையில் இந்த முறை போட்டியாளர்கள் அதிகம் என்பதால் யாரையும் புதிதாக அறிமுகப்படுத்தவில்லை. மேலும் இந்த போட்டியாளர்களுக்கு இடையே மிகுந்த சண்டை சச்சரவுகள் இருந்து வருகிறது மேலும் அனைவரும் சேப்பாக விளையாடி வரும் நிலையில் கமலஹாசன் இவர்களுக்கு அதிக முறை அறிவுரை கூறி வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி சண்டை போட்டு வந்தாலும் உண்மையை பேசி வருபவர் தான் அசிம் மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் இவர் பேசுவது தவறு என்றாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது. எனவே இந்நிகழ்ச்சி தொடங்கியது முதல் தற்பொழுது வரையிலும் வாரம் வாரம் நாமினேஷனில் இருந்து தப்பித்து வருகிறார் அசிம்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது அதாவது வழக்கம் போல் ஒரு எவிக்சன் மட்டும் அல்லாமல் இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு ஆயிஷா மற்றும் ராம் இருவரும் வெளியேற போகிறார்கள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் மக்கள் மத்தியில் மிகவும் குறைவான வாக்குகள் கிடைத்திருக்கும் நிலையில் இவர்கள் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளார்கள் இது இவர்களுடைய ரசிகர்களுக்கு பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.