விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் குறைவான அளவு வாக்குகளை பெற்றிருக்கும் போட்டியாளர்கள் வாரம் வாரம் வெளியேறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியாக இருக்கும் நிலையில் இது குறித்த தகவல் தற்பொழுது வைரலாகி வருகிறது.
தமிழ் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் தற்பொழுது 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் மைனா நந்தினி வைல்ட் காடு என்றியாக அறிமுகமானார். பிறகு ஜிபி முத்து மற்றும் சாந்தி இருவரும் இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளார்கள் தற்பொழுது 19 போட்டியாளர்களுடன் மிகவும் சுவாரசியமாக இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பாகி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நீயும் பொம்மை.. நானும் பொம்மை என்ற டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இதன் மூலம் பல சர்ச்சைக்குரிய செயல்கள் நடைபெற்று வருவது மேலும் அனைத்து போட்டியாளர்களும் சண்டை போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கடந்த வாரம் அசீம் ஆயிஷாவுடன் சண்டை போட்டு வந்த நிலையில் இதன் காரணமாக அசீமுக்கு சக போட்டியாளர்கள் மூலம் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
இந்த தவறை திருத்திக் கொள்ளாத அசீம் மீண்டும் அதே தவறை செய்துள்ளார் எனவே இந்த வாரம் இவர் எலிமினேட் செய்யப்படாக அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மக்கள் அளித்துள்ள வாக்குகளின் அடிப்படையில் இந்த வாரம் அசல் கோளாறு வெளியேற இருக்கிறார் இவர் தொடர்ந்து பெண்களிடம் தொட்டு தடவி பேசி வரும் நிலையில் இவருடைய வேலைகள் பிடிக்காத காரணத்தினால் இவரை வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் விரும்பி வருகிறார்கள்.
இவ்வாறு இந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து அசீமையும், மக்கள் அளித்துள்ள வாக்குகளின் அடிப்படையில் அசல் கோளாறு இருவரையும் இந்த வாரம் கமல் வெளியேற்ற போகிறார். இவ்வாறு ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த இந்த செயல் நாளை ஒளிபரப்பாக இருக்கிறது.