Jailer : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 7000 திரையரங்குகளில் வெளியானது அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் மட்டும் 1100 திரையரங்குக்கு மேல் ஜெயிலர் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் மிருனாள் வசந்த் ரவி, மோகன்லால், தமன்னா, யோகி பாபு, என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். அதேபோல் இந்த ஜெயிலர் திரைப்படத்தில் வசந்த ரவி ரஜினியின் மகனாகவும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியுள்ளார்.
ஆனால் பல ரசிகர்களுக்கு வசந்த் ரவியின் கதாபாத்திரம் பெரிதாக பிடிக்கவில்லை அதற்கு காரணம் அவர் பெரிதாக எக்ஸ்பிரஷன் காட்டவில்லை அப்படி இருக்கும் நிலையில் இந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் போட்டி போட்டதாக கூறப்படுகிறது.
மிகவும் பிரம்மாண்டமாக ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார் ரஜினி இதற்கு முன்பு பெரிதாக ஹிட் கொடுக்காததால் இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு விருந்தே கொடுத்துள்ளார். முதல் பாதி திரைக்கதை அபாரமாக இருந்ததாகவும் இரண்டாவது பாதி கொஞ்சம் ஸ்லோவாக இருந்ததாகவும் ரசிகர்கள் விமர்சனம் செய்தார்கள்.
ரஜினியின் மகனாக வசந்த் ரவி நடித்துள்ளார் இவர் தரமணி, ராக்கி ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அதாவது தன்னுடைய மகனுக்காக வில்லன்களை வேட்டையாடும் ரஜினிக்கு கடைசியில் வசந்த் ரவி மெயின் வில்லன் என தெரிய வருகிறது ஆனாலும் வில்லனாக நடிக்கும் வசந்த் ரவி பெரிதாக ரசிகர்களை கவரவில்லை இந்த நிலையில் ரஜினிக்கு மகன் ஆகா சிவகார்த்திகேயன் தான் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது அதேபோல் சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் கனவு எப்படியாவது ஒரு திரைப்படத்திலாவது சூப்பர் ஸ்டார் அவர்களுடன் நடித்து விட வேண்டும் என்பதுதான்.
அதேபோல் தன்னுடைய நண்பரும் இயக்குனருமான நெல்சன் இந்த வாய்ப்பை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது பின்னர் ஏன் ஜெயிலரில் நடிக்கவில்லை என்று கேட்டால் ரஜினி அதற்கு நோ சொல்லி விட்டதாக தகவல் தற்பொழுது தெரியவந்துள்ளது ஆனால் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியதாக தகவல் வெளியானது ஆனால் அதுவும் நடக்கவில்லை அதனால் சிவகார்த்திகேயனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
ஏற்கனவே தனுஷ் ஐஸ்வர்யா ரஜினி ஒன்றாக வாழ்ந்த பொழுது காலா திரைப்படத்தில் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என வெகு ஆசையில் இருந்துள்ளார் அதற்காக ரஞ்சித் அவர்களிடம் நேரடியாக தனுஷ் முறையிட்டார் ஆனால் ரஜினி அதெல்லாம் முடியாது என மறுத்துவிட்டாராம் தனுஷும் ரஜினியுடன் எப்படியாவது நடித்து விட வேண்டும் என ஆசை பட்டுள்ளார் அது கடைசியில் நடக்காமல் ஏமாற்றம் தான் மிஞ்சியது அதேபோல் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடன் தனுஷ் நடிக்க ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது.